animated man walking back and forth Scorching sun animation

Wednesday, December 12, 2012

‘மணமுறிவு’ பகுப்புக்கான தொகுப்பு



Posted in மணமுறிவு, மருத்துவம் on 28/11/2009 | Leave a Comment »

>
“அவர்கள் இருவரும் திருமணம் முடித்து அதன் பின் என்றென்றும் மகிழ்ச்சியோடு நீடுழி வாழ்ந்தார்கள்.”
இவ்வாறு நிறைவாக முடிவடையும் சிறுவர் கதைகளை வாசிக்காதவர் எவரும் இருக்க முடியாது.

கதைகளில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும்,
காதல் அதன் பின் திருமணம்.
அதைத் தொடரும் மகிழ்ச்சியான வாழ்க்கை.
எத்துணை நிறைவான வாழ்வு!
ஆனால் இவை எல்லோருக்கும் வாய்த்து விடுகிறதா?. பலரின் வாழ்க்கை திருமணத்தின் பின் கருகிவிடுகிறது.

சட்டரீதியான விவாகரத்து என்பது எமது சமூகத்தில் இன்னும் பரவலாகாத போதும் மணமுறிவுகளுக்குக் குறைவில்லை என்பதும் உண்மையே.

திருமணத்தின் பின்னான வாழ்வு நீடித்து நிலைக்குமா அல்லது முறிந்து போகுமா என்பதற்குக் காரணங்கள் என்ன?
திருமண வாழ்வை நீடிக்க அன்பும் காதலும் மட்டும் போதுமா? இவை பற்றி அறிய அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் 2001 முதல் 2007 வரை 2500 தம்பதிகளைக் கொண்டு செய்த இந்த ஆய்வானது பல காரணங்களை வெளிப்படுத்துகிறது.

ஆண்களின் வயதும் வயது வித்தியாசமும்
ஆண்களின் வயதும், தம்பதிகளுக்கு இடையேயான வயது வித்தியாசமும் ஒரு முக்கிய காரணியாக இனங் காணப்பட்டுள்ளது.
25 வயதிற்கு முன்னர் திருமணம் செய்த ஆணின் குடும்ப வாழ்வு விரைவிலேயே முடிவுக்கு வந்துவிடுகிறதாம்.
மனைவியை விட கணவனுக்கு 9 அல்லது அதற்கு மேற்பட்ட வயது இடைவெளியும் திருமண முறிவுக்கு காரணமாகச் சொல்லப்படுகிறது.
குழந்தைகள்
திருமணத்திற்கு முன்பே இதே துணை அல்லது வேறு துணை மூலம் குழந்தைகள் இருந்தால் மணமுறிவிற்கான வாய்ப்பு மிக அதிகமாகும்.

கணவனை விட அதிகமாகக் குழந்தை வேண்டும் என மனைவி ஆசைப்பட்டாலும் பிரிவு ஏற்பட வாய்ப்பு அதிகம் என இவ் ஆய்வு கூறுகிறது.
தம்பதிகளின் பெற்றோர்
தம்பதிகளின் பெற்றோரின் வாழ்க்கை முறையும் திருமண வாழ்வைப் பாதிக்கிறது.
தம்பதிகளில் எவர் ஒருவரின் பெற்றோர்கள் பிரிந்து வாழ்ந்தால் அல்லது விவாகரத்துப் பெற்றிருந்தாலும் மணமுறிவிற்கு வாய்ப்பு அதிகமாகிறதாம்.
ஏற்கனவே வேறு திருமணம்
முதல் திருமணத்தை விட இரண்டாவது அல்லது மூன்றாவது முறையாகத் திருமணம் செய்தவர்களின் மணவாழ்க்கை முறிவதற்கான வாய்ப்பு 90 சதவிகிதம் அதிகம் எனச் சொல்கிறது ஆய்வு.
குடும்ப வருமானமும் வசதியும்
பணத்திற்கும் திருமண உறவு நீடிப்பதற்கும் நிறையத் தொடர்பு இருக்கிறது. வறுமையில் இருப்பவர்கள், பொருளாதார ரீதியாக பலமான நிலையில் இருப்பவர்களை விட அதிகமாகப் பிரிய நேர்கிறதாம்.
அதே போல கணவன் வேலைவாய்ப்பு இன்றி இருந்தாலும் மணமுறிவு அதிகம். ஆனால் மனைவி வேலைவாய்ப்பு இன்றி இருந்தால் அவ்வாறு பிரிவு ஏற்படுவதில்லை என்பது கவனிப்புக்கு உரியதாகும்.
புகைத்தல்

தம்பதிகளில் ஒருவர் புகைப்பராக இருந்தாலும் குடும்பம் பிரிவதற்கான சாத்தியம் அதிகமாம். ஆனால் இருவருமே புகைப்பவராக இருந்தால் அவ்வாறு இல்லை என்கிறது இவ் ஆய்வு.
நீங்கள் புகைப்பவராக இருந்து அதனால் உங்களுக்கும் மனைவிக்கும் இடையே அடிக்கடி சச்சரவுகள் ஏற்படுகிறதா?
அவ்வாறாயின் மணமுறிவைத் தடுக்க என்ன செய்யலாம்.
சுகமான வழி மனைவிக்கும் புகைக்கப் பழக்கிவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும் என எண்ணுகிறீர்களா?
உண்மைதான்!
இருவருமே புகைப்பதனால் பிரிவதற்கான வாய்ப்புக் குறைந்துவிடும்.
அத்துடன் ‘இருவருக்குமே இவ்வுலக வாழ்வின் துன்பங்கள் விரைவிலேயே தீர்ந்து இறைவனடி சேர்ந்துவிடலாம்!’.
மதுப் பாவனை
அதீத மதுப் பாவனையும் அத்தகைய நிலையை ஏற்படுத்துமா என்பதையிட்டு ஆய்வு எதனையும் குறிப்பிடவில்லை. ஆனால் அதுவும் மணமுறிவிற்கு காரணமாவதை எமது சூழலில் காணக் கூடியதாக இருக்கிறது.
எமது சூழலுக்கு ஏற்ற ஆய்வு தேவை
இந்த ஆய்வின் முடிவுகள் அவுஸ்திரேலிய சூழலைக் கருத்தில் கொண்டே செய்யப்பட்டுள்ளன. எமது சூழலுக்கு இவற்றில் சில பொருத்தம் அற்றவையாகும்.
  1. கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை,
  2. மாமியார் மருமகள் பிணக்குகள்,
  3. புலம் பெயர்ந்த வாழ்வு,
  4. கணவன் அல்லது சில வேளைகளில் மனைவி வெளிநாடு சென்றுவிட மற்றவரின் தனிமை வாழ்வு ஏற்படுத்தும் தாக்கம்,
  5. திருமணத்திற்கு அப்பாலான தகாத உறவுகள்
போன்றவை எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்துகின்றன
என்பதை இங்கு ஆய்வு செய்வது அவசியம் என எண்ணுகிறேன்.
வறுமையும், பொருளாதாரத்தில் குறைந்த நிலையும் மணமுறிவுகளுக்குக் காரணம் என மேற்கத்தைய ஆய்வு சொல்கிறது.
ஆனால் எமது சூழலில், மிகவும் வறிய சூழலிலும் மிகவும் இனிமையான, அன்னியோன்யமான கணவன் மனைவி உறவைக் காண்பது சகசம். ஆயினும் இங்கு பணம் நிறைந்த, செல்வச் செருக்கு மிக்கவர் மத்தியில் அதிக மணமுறிவுகள் ஏற்படுவதாக எனக்குப் படுகிறது.
பதினாறு பெற்ற குசேலர் வறுமையின் எல்லையிலும் மகிழ்வாக வாழ்ந்ததாகவே கதைகள் கூறுகின்றன.
ஜாதகப் பொருத்தம்
இவை எதுவும் காரணங்கள் அல்ல.
சரியான ஜாதகப் பொருத்தம் பார்க்காததே காரணம் என்று சொல்லும் அதி மேதாவிகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

FILEகளைஐ அழிக்க முடியவில்லையா




ஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்து வருகிறது. தேவையற்ற சில பைல்களை அழிக்கலாமே என்று முயற்சிப்போம். அப்போது நமக்கு எதிரியாக கம்ப்யூட்டர் நடந்து கொள்ளும். பைலை அழிக்க முடியாது (“Cannot Delete File”) என்று அதிரடியாகத் தகவல் தரும். அது ஒரு டாகுமெண்ட் பைலாகவோ அல்லது மியூசிக் மற்றும் பட பைலாகவோ இருக்கலாம். என்ன இது இவ்வாறு எதிர்வாதம் செய்கிறது? என்று எண்ணி மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்வோம்; ஆனால் மீண்டும் மீண்டும் அதே செய்திதான் வரும். சில வேளைகளில் காரணங்களும் காட்டப்படும். ஹார்ட் டிஸ்க்கில் போதுமான இடம் இல்லை. அதனால் அழிக்க முடியவில்லை என்று காரணம் கிடைக்கலாம். இது இன்னும் அதிகமான குழப்பத்தில் உங்களை சிக்க வைக்கும். ஏனென்றால் அதிக இடம் வேண்டும் என்பதற்காகத்தானே நீங்கள் பைலை அழிக்க முயற்சிக்கிறீர்கள். சில பைல்களுக்கு இந்த பைலை இன்னொருவர் பயன்படுத்திக்...

FACEBOOK: விருப்பத்திற்கு ஏற்றபடி வடிவமைக்க




வழக்கமாக நமது Facebook தளத்தின் தோற்றம் கீழே உள்ளது போன்று இருக்கும். ஆர்குட் போன்ற தளங்களில் நாம் Theme களை மாற்றுவது போல, Facebook தளத்திலும், நமது விருப்பத்திற்கு ஏற்றபடி மாற்றுவதற்கு userstyles என்ற வலைப்பக்கம் மிகவும் அருமையாக உள்ளது. (தளத்திற்கான சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது) இந்த வலைப்பக்கத்திற்கு சென்று நீங்கள் விரும்பும் theme ஐ தேர்வு செய்து க்ளிக் செய்த பிறகு திறக்கும் பக்கத்தில், வலது மேற்புறம் தோன்றும் பெட்டியில், Install as user script  பொத்தானை க்ளிக் செய்யுங்கள். அடுத்து வரும் Confirmation வசனப்பெட்டியில் Install பொத்தானை க்ளிக் செய்து நிறுவிக்கொள்ளலாம். இனி புதிய தோற்றத்தில் Facebook இல் விளையாடுங்க.. http://userstyles.org/styles/browse/facebook....

கட்டாயம் நிறுவ வேண்டிய 5 மென்பொருட்கள்







http://freeallsoftwares.com/wp-content/uploads/2011/01/Macrium-Reflect.jpg








 Dropbox or Syncback SE

மேற்குறிப்பட்ட மென்பொருட்கள் இலவசமாக தரவிறக்கிக்கொள்ள கூடியதுடன் நம் கணனிகளில் கட்டாயம் நிறுவியிருக்க வேண்டிய மென்பொருட்களாகும்.

உங்கள் கணனியை வேகமாக செயற்படுத்த ஒரு இலகுவான வழி


எதுவித மென்பொருட்களையும் நிறுவாமல் உங்கள் கணனியை முன்னிருந்ததை விட வேகமாக செயற்படுத்த ஒரு இலகுவான முறையினை இங்கு உங்களிடன் பகிர்கின்றேன்.

முதலில் 'Start' பொத்தானை கிளிக் செய்து 'Run' என்பதை தெரிவு செய்யுங்கள்.

பின் அதில் regedit என டைப் செய்து 'Enter' பொத்தானை அழுத்துங்கள்.

பிறகு தோன்றும் Registry Editor வின்டோவில் HKEY_CURRENT_USER இன் கீழ் உள்ள control panel யை தெரிவுசெய்து அதில் desktop என்பதை கிளிக் செய்யுங்கள். 

அதன் வலது பக்கத்தில் காட்டப்பட்டுள்ள registry setting இல் 'MenuShowDdelay' என்பதன் மேல் right click செய்து modify என்பதை தெரிவு செய்யுங்கள்.



அதில் default value data வாக காட்டப்பட்டுள்ள '400' ஐ '000' வாக மாற்றிய பின் OK பொத்தானை அழுத்துங்கள்.



பின்னர் உங்கள் கணனியை Restart செய்யுங்கள்.

உமது கணனி முன் இருந்ததை விட வேகமாக செயற்படுவதை உங்களால் உணர கூடியதாக இருக்கும்.
இம்முறையின் மூலம் கணனியை வேகமாக தொடக்கவும் (start) முடியும்.


Thursday, November 15, 2012

டிசம்பர் 21ஆம் திகதி நிபிறு பிரளயம்... உலகம் அழியப்போகிறதா?


டிசம்பர் 21ஆம் திகதி நிபிறு பிரளயம்... உலகம் அழியப்போகிறதா?

Published:Thursday, 15 November 2012, 21:16 GMTUnder:General
உலகில் தோன்றும் ஒவ்வொரு உயிரும் ஒரு நாள் மரித்துப்போகும் ஆனால் பூமியில் வாழும் ஒட்டுமொத்த உயிரும் ஒரே நாளில் மரித்துப்போனால்? எண்ணிப்பார்க்கவே எம்முள் அச்சம் குடிகொள்வதை தவிர்க்கமுடியவில்லை. ஆனால் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் நாள் இது நடந்தே தீரும் என்கிறது ஒரு கூட்டம்
 
 சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வரையில் பூமியில் கோலோச்சி இருந்த டைனோசோர்கள் அழிந்தது போல ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கும் மனித இனமும் வருகின்ற டிசம்பரில் ஏற்படப்போகும் நிபிறு பிரளயத்தினால் அழியப்போகிறது.
 
 பூமியில் பாரிய எரி கல் ஒன்று மோதுண்டதனால் வெளியான வெப்பம், தூசு என்பவற்றுடன் இக்கல் விழுந்தமையினால் ஏற்பட்ட பூமி அதிர்வு, கடல் பரப்பிலிருந்து வெளியான நீர் என்பவற்றாலேயே டைனோசர்கள் பூமியில் சுவடுகளாக மாறியதற்கு காரணம். மேலும் மெக்சிகோ பகுதியில் ஏற்பட்ட இச்சம்பவத்தின் போது வெளியான தூசு பூமியிலிருந்து முழுமையாக நீங்குவதற்கு சில ஆண்டுகள் எடுத்தது.
 
 இதனால் அண்ணளவாக பூமியின் முழுப்பகுதியுமே பாதிக்கப்பட்டதுடன் பல்லாயிரக்கணக்கான இனங்கள் அழிவடைந்ததாம். இதிலிருந்து எஞ்சிய உயிரினங்களிலிருந்தே கூர்ப்பு மூலம் மனிதன் 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக ஆரம்பித்து தற்கால மனிதனாக தோற்றம் பெற்று சுமார் 13 ஆயிரம் வருடங்கள் என்கிறது விஞ்ஞானம்.
   
இவ்வாறு பூமிக்கு வந்த மனித இனம், இந்த டிசம்பர் மாதம் 21ஆம் திகதி ஏற்படப்போகும் நிபிறு பிரளயத்தினால் இப் பூமியை விட்டுச் செல்லப் போவதை யாராலும் தடுக்க முடியாது. இதனை நாசாவும் நன்கு அறிந்து வைத்துள்ளது. இவ்வாறெல்லாம் பல தகவல்களை கசியவிட்டு மக்களை பீதியில் தள்ளிவிட்டுள்ளார்கள் இனம் தெரியாதவர்கள் சிலர்.
 
 உண்மையில் நிபிறு பிரளயம் என்றால்? இது நிச்சயம் டிசம்பரில் ஏற்படுமா? என்றவாறான பல கேள்விகளுக்கும் இதுவரையில் நம்பும் விதமாக வெளியாகியுள்ள தகவல்கள் இவ்வாறு அமைந்துள்ளது.
 
 
 சூரியத்தொகுதியை போலவுள்ள பல்லாயிரக்கணக்கான தொகுதியில் ஒரு தொகுதியிலிருந்து நிபிறு எனும் கோள் 3600 வருடங்களுக்கொரு முறை பூமியை அண்மிக்கும் இதன் போது நிபிறுவின் துணைக்கோள்களுடன் சேர்த்து மொத்தமாக 6 கோள்கள் பூமியை பாதிப்புக்குள்ளாக்கும்.
 
 இதனால் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் சுனாமி, பூமியதிர்ச்சி, எரிமலை வெடிப்புக்கள் மற்றும் நிலங்கள் பல துண்டுகளாக பிளவடையும் இதனைத் தொடர்ந்து சுமார் 2 வருடங்களில் படிப்படியாக மிக மெதுவான முறையில் பூமி தன்னை மீளமைக்கும். இதற்கிடையில் பூமியிலுள்ள மனிதர்களில் 2ஃ3 பங்கினருக்கு மேல் அழிந்துவிடுவார்கள். இதுவே 'நிபிறு பிரளயம்' எனச் மிகச் சுருக்கமாக விளக்கியுள்ளார்கள்.
 
 இம்முறை நிபிறு பிரளயம் ஏற்படப்போகும் சந்தர்ப்பத்தில் பூமியானது தன்னை தானே ஒழுங்குபடுத்த ஆரம்பிக்கும் காலமாக இருப்பதோடு துருவங்களும் இடமாற்றடையும். இந்நிலையில் 3 நாட்களுக்கு சூரியன் தனது சுழற்சியை நிறுத்தி வைத்திருக்கும். மேலும் 180 பாகையில் மாறி மாறி திரும்பலடையும் ஆனால் சுழற்சி இருக்கமாட்டாது என்கிறார்கள்.
 
   
இதற்காக பல நம்பிக்கைக்குரிய ஆதரங்களையும் முன்வைத்துள்ளனர். அவை அனைத்தும் 2012ஆம் ஆண்டினையே சுட்டிக்காட்டுகின்றது. எழுத்தாளரும், வானியல் ஆலோகசருமான 1500ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த நெஸ்ட்ரடோமஸ் அனுமானித்துள்ளதாவது, எமது கிரகம் பெரியதோர் இலக்கில் செல்லுகிறது அது 2012 முடிவடையும். ஆனால் அது எமக்கு கிடைக்கமாட்டாது.
 
 மேலும் 20ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானி ஐன்ஸ்டைன் கூறியுள்ளதாவது, துருவப் பெயர்ச்சி இடம்பெறும் போது நாம் பாரியளவில் பாதிக்கப்படுவோம். இவையெல்லாம் இந்த நிபிறு பிரளயத்தையே குறிக்கிறது எனக் கூறும் அதே வேளை மாயன் நாட்காட்டியை சுட்டிக்காட்டியுள்ளனர்.
 
 மிகப் பழைமை வாய்ந்த நாட்காட்டிகளில் ஒன்றான மாயன் 2012.12.21 அன்றுடன் முடிவடைகின்றது. அத்துடன் விஞ்ஞானத்தின் அண்மைய கண்டுபிடிப்புக்கள் பலவற்றினை துல்லியமா பல ஆண்டுகளுக்கு முன்னரே மாயன்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனை கல்வெட்டுக்கள், சித்திரங்கள் என்பவற்றினூடாக விட்டுச்சென்றுள்ளனர். குறிப்பாக பூமியில் வாழ்ந்த ஒவ்வொரு உயிரினமும் அழிந்த பின்னர் புதியதோர் உயிரினம் தோன்றும், உயிரின் தொடர்ச்சியை சித்தரிக்கும் வகையிலமைந்துள்ள சித்திரங்கள் அதிசயிக்கத்தகதாகவே உள்ளது. இவ்வாறு விஞ்ஞானத்தை வென்ற மாயன்களின் கணிப்பின் படி உலகம் 2012இல் அழியும் என்பதே. 
 
 மேலும் ஹிப்ரு பைபிளும் 2012இல் உலகில் பாரிய அழிவுகள் உண்டு என்பதை உணர்த்துகின்றது. இது போல இன்னும் ஏராளமான குறிப்புக்கள் 2012ஆம் ஆண்டில் ஏற்படப்போகும் அழிவுகளை மத நம்பிக்கைகள் சார்ந்தும் சாராமலும் சுட்டிக்காட்டுவதாக தெரிவிக்கின்றார்கள்.
 
 இவை தவிர 3600 வருடங்களுக்கு முன்னர் நிபிறு பிரளத்தினால் பாதிக்கப்பட்டு எச்சங்களாகிய மனித இனத்தினால் அடுத்துவரும் சந்ததிக்கு விட்டுசென்ற சுவடுகளும் ஏராளம் உண்டு. அவற்றில் பல்வேறு அம்சங்கள் மத நம்பிக்கைக்குரிய எழுத்துருக்களாக மாற்றம் பெற்று இன்றுவரை அழியாது பேணப்படுகிறதாம்.
 
 மேலும் நாசாவானது இந்த நிபிறு பிரளயம் பற்றி நன்கு அறிந்துள்ளதாகவும் அதிலிருந்து மீளுவதற்காக 1983ஆம் ஆண்டிலேயே ஆயத்தமாகிவிட்டதாகவும் இதற்காக இரகசியத் திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர். 
 
 இதற்காக நாசா ரகசியமாக மேற்கொண்டுள்ள திட்டத்தினை விளக்குகையில், 1982ஆம் ஆண்டு சூரியத்தொகுதியிலுள்ள 9 கோள்களை தவிர மேலதிகமாகவும் ஒரு கோளினை கண்டுபிடித்துள்ளது நாசா. நிபிறு பிரளம் ஏற்படும் போது கண்டுபிடித்துள்ள புதிய கோளிற்கு தப்பிச் செல்வது திட்டம். அதற்கான சகல ஏற்பாடுகளும் நடைபெற்ற வண்ணமே உள்ளது.
 
 குறிப்பாக தப்பிச்செல்லதவற்குரிய கோளாக அப்புதிய கோளினை தேர்வு செய்துள்ளமைக்கான காரணம் என்னவெனில் பிரளயம் ஏற்படும் காலப்பகுதில் பூமிக்கு மிக மிக அண்மையில் இருக்கும் கோள் இதுவாம். அத்துடன் பூவியிலிருந்து இக்கோள் தூரமாக செல்லுவதற்கு 2 வருடங்களுக்கு மேலாகும். இதனால் மீளமைக்கப்பட்ட பூமிக்கு விரைவில் திரும்பிவிடலாம். இதற்காக அமெரிக்காவில் அதிகாரபூர்வமற்ற விமானம் நிலையம் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளதாம். 
 
 குறித்த விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உலகிலுள்ள முக்கிய பணக்காரர்கள் போட்டி போட்டுக்கொண்டு இடங்களை கொள்வன செய்து வைத்துள்ளனர். இவை பிரளயத்திற்கான முன்னேற்பாடுகள் என்று கூறும் அதேவேளை மொத்த மனித குலத்தினையும் புதிய கோளில் குடியேற்றி பாதுகாப்பது சாத்தியமற்ற விடயம் என்பதாலேயே இதுவரையில் இத்தகவல்களை வெளியிடாமல் ரகசியம் பேணுகின்றனர் என்கின்றனர். 
 
 மேலும் இந்த கோளினை கண்டுபிடித்த அடுத்த ஆண்டே நீண்டகால பாரிதோர் இலக்கினை நோக்காக கொண்டு ஐசுயுளு (ஐகெசயசநன யளவசழழெஅiஉயட ளயவநடடவைந) இனை நிறுவியது. இத்திட்டம் முழுவதற்குமாக 'Pடயநெவ ஓ ஃ(நிபிறு)' எனப்பெயரிடப்பட்டுள்ளது.
 
 பூமியின் தென்பகுதிகளிலேயே நிபிறு பிரளயத்தின் அறிகுறிகள் முதன் முதலில் தென்படும் என்ற காரணத்தினால் இத்திட்டத்தினை முன்னெடுக்க தென்துருவத்தில் ஸ்டோன்ஹென்ஜ்ஃஈஸ்டர் ஐலேண்ட் பிரதேசத்தினை தேர்வு செய்து நிபிறு கோள்கள் சம்மந்தமாக உலகுக்கு தெரியாமல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கின்றனர்.
 
 ஆனாலும் தற்போது வெளியாகியுள்ள நிபிறு பிரளயம், பூமியை இருள் சூழல், துருவ மாற்றங்கள் என்பவை 2012இல் நடைபெறமாட்டாது என்று 2008ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து மறுத்துவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 
 
 மேலும் அடுத்த 4 மில்லியன் வருடங்களுக்கு பூமி அழிவடைய வாய்ப்பில்லை. அத்துடன் துருவமாற்றமோ பூமி தன்னைத் தனே ஒழுங்கு படுத்தும் செயற்பாடுகளோ 2012இல் இடம்பெற மாhட்டாது என்றும் இது மாயன் மற்றும் சமரியரின் நம்பிக்கைகள் மட்டுமே என்றும் தெரிவித்துள்ளது.
 
 நிலைமை இவ்வாறு இருக்கு 2012இல் பூமியில் பாரிய அழிவுகள் இடம்பெறும் என்ற கருத்து வலுக்க குறித்த நபர்களால் கூறப்பட்டுள்ள சில அறிகுறிகள் நடந்துள்ளமை அழிவு ஏற்பட்டுவிடுமோ என அச்சத்தை ஏற்படுத்துவதை மறுப்பதற்கில்லை.
 
 2009ஆம் ஆண்டளவில் சூரியனைப் போன்றதொரு பிரகாசமான வால்வெள்ளி ஒன்று பூமியில் தோன்றும் அது வெற்றுக் கண்ணுக்குத் தென்படும் இதுவே பிரதான அறிகுறி என்று குறியிருந்தனர். அப்படி ஒன்றும் 2009இல் இடம்பெறவில்லை என்றாலும் இந்த வருடம் ஒக்டோபர் மாதமளவில் நியூஸிலாந்து பகுதியில் கொமட் என்ற வால்வெள்ளி பகல் நேரங்களிலும் தென்பட்டுள்ளது. ஆனால் இதனால் பூமிக்கு ஆபத்தில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.
 
 அப்படியானால் 2012ஆம் ஆண்டில் பூமியில் ஏதாவது அசம்பாவிதங்கள் இடம்பெறுமா? என்றால், ஆபத்து வரும் என்று யார் சொன்னது, வராமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் சொல்லுகிறோம் என்ற பாணியிலேயே விடையளிக்கின்றனர்.
 
 வசந்த காலம், கோடை காலம், மாரி காலம் என மாறி மாறி வருடத்தினை அழகுபடுத்த பருவங்கள் வந்து போவதைப் போல டிசம்பர் மாதம் வதந்திகாலமாக மாறி மக்களை அச்சுறுத்தி வருவதை கடந்த சில வருடங்கள் உறுதிப்படுத்திக்கொள்ளத் தவறவில்லை.
 
 உண்மையில் டிசம்பர் மாதம் வருடத்தின் இறுதி மாதமே அன்றி அது உலகத்தின் இறுதி மாதமல்ல என்பதை அடுத்தடுத்து வருகின்ற ஒவ்வொரு ஜனவரியும் அந்த நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றது. 
 
 யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே எனும் பாணியில் டிசம்பர் மாதம் ஆரம்பமாவதுதான் தாமதம் வதந்திகள் முந்திங்கொள்ளும். அதுவும் ஆங்கிலப்படங்களின் வருவது போல உலகம் அழியப்போகிறது... எம்மை நோக்கி பெரிய ஆபத்து வருகிறது என்று கிளப்பிவிட ஒரு கும்பல் எப்போதும் டிசம்பர் மாதத்திற்காக காத்திருப்பதை நீங்களும் ஒரு நாள் உணர்ந்திருப்பீர்கள். ஒரு தடவையே சுனாமி எம்மைத் தாக்கியது ஆனால் ஓராயிரம் தடவைகள் எம்மை ஓட விட்ட கும்பலும் இதுவன்றோ.
 
 இந்த வகையில் இம்முறையும் அந்த கும்பல் மக்களிடையே பீதியை கிளப்ப மறக்கவில்லை. வரும் டிசம்பர் மாதத்தில் சூரியன் 3 நாட்களுக்கு மேல் உதிக்காமல் பின்னர் மேற்கிலிருந்து உதிக்க ஆரம்பிக்கும். இது உலக அழிவின் ஆரம்பம், டிசம்பர் 21ஆம் திகதியுடன் மாயன் நாட்காட்டி முடிவுக்கு வருகின்ற அன்றைய தினம் நிபிறு பிரளயம் ஏற்பட்டு உலகம் அழியப்போகின்றது என பல கதைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள். 
 
 ஆனாலும் 2003ஆம் ஆண்டிலிருந்தே 2012ஆம் குறிவைத்து ஏராளமான தகவல்கள், பூமியில் பாரிய அழிவுகள் உண்டு என்பதை உரைத்து வருகின்றது. அவை அனைத்தும் மத நம்பிக்கைகளுடன் தொடர்புபட்ட அதேவேளை விஞ்ஞானத்துடனும் ஒத்துப்போவதனால் இவை எதனையும் அத்தனை இலகுவில் இம்முறை வதந்திகள் என்ற பார்வையில் சிந்திக்க முடியவில்லை என்பதே உண்மை.
 
 உண்மை உணர்ந்துகொள்ள நீண்ட நாட்கள் இல்லை. டிசம்பர் 21 எம்மை நெருங்கிக்கொண்டே இருக்கிறது. அதுவரை தேவையற்ற வதந்திகளினால் மக்களை பீதி ஏற்படுத்துவதை குறைத்து வீணாக உயிர்கள் பலியாவதை தவிர்ப்பதே சாலச் சிறப்பு. மேலும் நடப்பவை நன்றாகவே நடக்கும் என்று நம்புவோம்!
 

Tuesday, November 6, 2012



இன்டர்நெட் வசதி இல்லாமல் கூகுளில் எப்படி சர்ச் செய்வது?


இன்டர்நெட் வசதி இல்லாமல் கூகுளில் எப்படி சர்ச் செய்வது? இது கொஞ்சம் கடினமான கேள்வி தான். ஆனால் இதற்கு விடையளிப்பது மிக சுலபம்.
இக்கட்டான தருணங்களில் கைகொடுக்கிறது கூகுளின் சில வசதிகள். மிக முக்கியமான சில தகவல்களை கூகுளில் சர்ச் செய்வதன் மூலம் பெற முடியும். ஆனால் இதற்கு இன்டர்நெட் மிக அவசியம். இன்டர்நெட் இல்லாமலும், மொபைலில் வேண்டிய தகவல்களை பெறலாம்.
உதாரணத்திற்கு உடனடியாக டேக்ஸி தேவைப்படுகிறதென்றால், இது சம்மந்தமானவர்களின் மொபைல் எண் தேவைப்படும். அப்படி மொபைல் எண் எதுவும் இல்லை என்றால் இன்டர்நெட் வசதி கொண்டு தேடுவது வழக்கம்.
இந்த சமயத்தில் இன்டர்நெட் வசதி இல்லை என்றால் பிரவுசிங் சென்டருக்கு சென்று தேடி கொண்டிருக்க முடியாது. இது போன்ற தருணத்தில் டேக்ஸி என்று டைப் செய்து, பின்னர் எந்த இடத்தில் இருக்கிறீர்களோ அந்த இடத்தின் பெயரையும் டைப் செய்து, 9773300000 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.
இப்படி அனுப்பினால் உடனடியாக கூகுளிலின் பட்டியலில் இருந்து டேக்ஸி வழங்கும் சில நிறுவனங்களின் மொபைல் எண்களும், முகவரிகளும் உங்கள் மொபைலிற்கு மெசேஜ் மூலம் தகவல் கிடைக்கும். இந்த பட்டியலில் எந்த நம்பரை தேர்வு செய்து கொள்கிறோமோ அதை தேர்வு செய்து, பின் போன்கால் செய்து டேக்ஸி வசதிக்கு அனுகலாம்.
இது போன்று தகவல்களை கூகுளில் இன்டர்நெட் இருந்தால் தான் பெற முடியும். ஆனால் அவசர தேவைக்காக கூகுள் இந்த சேவையை வழங்குகிறது.

இன்டர்நெட் வசதி இல்லாமல் கூகுளில் எப்படி சர்ச் செய்வது? இது கொஞ்சம் கடினமான கேள்வி தான். ஆனால் இதற்கு விடையளிப்பது மிக சுலபம்.
இக்கட்டான தருணங்களில் கைகொடுக்கிறது கூகுளின் சில வசதிகள். மிக முக்கியமான சில தகவல்களை கூகுளில் சர்ச் செய்வதன் மூலம் பெற முடியும். ஆனால் இதற்கு இன்டர்நெட் மிக அவசியம். இன்டர்நெட் இல்லாமலும், மொபைலில் வேண்டிய தகவல்களை பெறலாம்.
உதாரணத்திற்கு உடனடியாக டேக்ஸி தேவைப்படுகிறதென்றால், இது சம்மந்தமானவர்களின் மொபைல் எண் தேவைப்படும். அப்படி மொபைல் எண் எதுவும் இல்லை என்றால் இன்டர்நெட் வசதி கொண்டு தேடுவது வழக்கம்.
இந்த சமயத்தில் இன்டர்நெட் வசதி இல்லை என்றால் பிரவுசிங் சென்டருக்கு சென்று தேடி கொண்டிருக்க முடியாது. இது போன்ற தருணத்தில் டேக்ஸி என்று டைப் செய்து, பின்னர் எந்த இடத்தில் இருக்கிறீர்களோ அந்த இடத்தின் பெயரையும் டைப் செய்து, 9773300000 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.
இப்படி அனுப்பினால் உடனடியாக கூகுளிலின் பட்டியலில் இருந்து டேக்ஸி வழங்கும் சில நிறுவனங்களின் மொபைல் எண்களும், முகவரிகளும் உங்கள் மொபைலிற்கு மெசேஜ் மூலம் தகவல் கிடைக்கும். இந்த பட்டியலில் எந்த நம்பரை தேர்வு செய்து கொள்கிறோமோ அதை தேர்வு செய்து, பின் போன்கால் செய்து டேக்ஸி வசதிக்கு அனுகலாம்.
இது போன்று தகவல்களை கூகுளில் இன்டர்நெட் இருந்தால் தான் பெற முடியும். ஆனால் அவசர தேவைக்காக கூகுள் இந்த சேவையை வழங்குகிறது.


நல்ல தகவல்களை நாலு பேருடன் பகிருங்கள் நண்பர்களே...

 0 0 0 3
 

Saturday, October 27, 2012

ARTERY IN TAMIL 5


popliteal artery பின் ழுழங்கால் நாடி
pulmonary artery நுரையீரல் தமனி
pulmonary artery நுரையீரனாடி
radial artery ஆரத்தமனி
radial artery ஆரைநாடி
renal artery சிறுநீரகத்தமனி
renal artery சிறுநீரகநாடி
renal artery நீரகநாடி
retinal artery விழித்திரைத் தமனி
sciatic artery இடுப்புநாடி
sciatic artery கால்தமனி
splenic artery பிளீகத்தமனி
subclavian artery காறைக்கீழ்நாடி
subclavian artery காறையெலும்புக்கீழ்நாடி
subclavian artery கீழ்க்கழுத்துத் தமனி
subscapular artery தோட்பட்டைக்கீழ்நாடி
superior mesenteric artery மேல் வபைத் தமனி
supra temporal bridge மேற்பொட்டு எலும்பு இணைப்பு
supra temporal foramen மேற்பொட்டுப் பெருந்துளை
supra temporal portion மேற்பொட்டுப் பகுதி
supra-temporal மேற்கன்னத்துக்குரிய
temporal உலகியல் சார்ந்த
temporal கன்னப் பொட்டு எலும்பு
temporal கால(ம்)
temporal காலத்தொடர்புள்ள, நெற்றிப் பொட்டுகள் சம்பந்தப்பட்ட
temporal காலம் சார்ந்த
temporal பொட்டு
temporal பொட்டு, பக்கமண்டை
temporal வயிற்றறை அடி முகு நரம்பு
temporal arch பொட்டு வளைவு

MEDICAL TERM IN TAMIL


ENGLISH  TAMIL
temporal bone கன்ன எலும்பு
temporal bone கடைநுதலெலும்பு
temporal bone கன்னவெலும்பு
temporal bridge பொட்டுப் பாலம்
temporal cartilage தற்காலிக குறத்தெலும்பு
temporal fossae பொட்டுப் பெருந்துளைகள்
temporal isolation சூழ்நிலைத் தனிமைப்படுத்துதல்
temporal lobe சில்ிவியஸ் பிளவுக்குக் கீழுள்ள மூளைமடல்
temporal lobe பொட்டுமடல், மூளைப்பக்க மடல்
temporal maze வந்த வழியே வரும் சிக்கலறை
temporal muscle பொட்டுத் தசை
temporal or time variation நேரமாறல்
temporal power லௌகீக அதிகாரம் , சமயம் சாரா அதிகாரம்
temporal region பொட்டுப் பகுதி
temporal relationship நிலையற்ற தொடர்பு
temporal sign காலத்தின் பாற்பட்ட நிலையில் இருத்தல்
testicular artery விரைத்தமனி
tibal artery கெண்டைக்கானாடி
tibial artery கணைக்கால்நாடி
tibial artery டிபியத்தமனி
ulnar artery அல்னாத்தமனி
ulnar artery முழங்கைநாடி
umbilical artery கொப்பூழ்நாடி
vertebral artery முள்ளியத்தமனி
vitelline artery கருவுணவுப்பைத் தமனி
zygomatico-temporal மேற்றாடைகன்னச்சட்டவெலும்புகளுக்குரிய

ARTERY IN TAMIL - 4

popliteal artery பின் ழுழங்கால் நாடி
pulmonary artery நுரையீரல் தமனி
pulmonary artery நுரையீரனாடி
radial artery ஆரத்தமனி
radial artery ஆரைநாடி
renal artery சிறுநீரகத்தமனி
renal artery சிறுநீரகநாடி
renal artery நீரகநாடி
retinal artery விழித்திரைத் தமனி
sciatic artery இடுப்புநாடி
sciatic artery கால்தமனி
splenic artery பிளீகத்தமனி
subclavian artery காறைக்கீழ்நாடி
subclavian artery காறையெலும்புக்கீழ்நாடி
subclavian artery கீழ்க்கழுத்துத் தமனி
subscapular artery தோட்பட்டைக்கீழ்நாடி
superior mesenteric artery மேல் வபைத் தமனி
supra temporal bridge மேற்பொட்டு எலும்பு இணைப்பு
supra temporal foramen மேற்பொட்டுப் பெருந்துளை
supra temporal portion மேற்பொட்டுப் பகுதி
supra-temporal மேற்கன்னத்துக்குரிய
temporal உலகியல் சார்ந்த
temporal கன்னப் பொட்டு எலும்பு
temporal கால(ம்)
temporal காலத்தொடர்புள்ள, நெற்றிப் பொட்டுகள் சம்பந்தப்பட்ட
temporal காலம் சார்ந்த
temporal பொட்டு
temporal பொட்டு, பக்கமண்டை
temporal வயிற்றறை அடி முகு நரம்பு
temporal arch பொட்டு வளைவு

Artery in tamil - 3


inferior mesenteric artery கீழவகைத்தமனி
infra temporal arcade கீழ்ச் செவுள் வளைவு
innominate artery நிருநாமநாடி
innominate artery நிருமநாமநாடி
internal carotid artery உட்சிரசு நாடி
internal carotid artery உள் கரோட்டிட் தமனி, உட்கழுத்துத் தமனி
lateral temporal fossa பக்க பொட்டுத்துளை
lateral temporal fossa பக்கப்பொட்டுத் துளை
leinogastric artery லீனோகாஸ்ட்ரித் தமனி
lienogastric artery மண்ணீரலிரைப்பைநாடி
lienogastric artery லியனோகாஸ்ட்டிரிக் தமனி
lingual artery நாக்குத் தமனி
lingual artery நாக்குநாடி
lingual artery நாநாடி
lords temporal லௌகிகப் பிரபுக்கள்
lower temporal arch கீழ்ப்பொட்டு வளைவு
mandibular artery தாடைநாடி
mesenteric artery குடல் சவ்வுத் துணி
mesenteric artery நடுக்குடநாடி
mesenteric artery நடுக்குடனாடி
muscular artery தசைத்தமனி
neubauer artery வலைப்பின்னல், திசுவலை, வலையுரு
nutrient artery ஊட்டுத்தமனி
occipital artery பிடர் நாடி
occipito vertebral artery பிடர் முள்ளெலும்புத் தமனி
omphalomesenteric artery உந்திக்குடல்தாங்கித் தமனி
pectoral artery மார்புத் தமனி
perforating artery துளைப்புகுத் தமனி
phrenic artery விதானிகத் தமனி
plantar artery பரதநாடி

ARTERY IN TAMIL -2


coronary artery கரோனரித் தமனி
cutaneous artery புறத்தோனாடி
cystic artery சிறைப்பை நாடி
digital artery விரல்தமனி
dorsal artery புறப்பக்கநாடி
dorsal temporal fossa முதுகுப்பக்கப் பொட்டுத்துளை
dorsalis pedis artery புறங்கால் தமனி
duodenal artery முன்சிறுகுடனாடி
efferent branchial artery வெளிகாவுபூநாடி
end artery இறுதித்தமனி
end-artery முடிவுத்தமனி
epibranchial artery மேற்பூநாடி
external carotid artery வெளிச்சிரசுநாடி
facial artery முகநாடி
femoral artery ஃபீரமத்தமனி
femoral artery ஃபெமோரல் தமனி (அ) தொடைத் தமனி
femoral artery தொடைநாடி
gastric artery இரையியத் தமனி
gastro epiploic artery இரையக பேருதர மடிப்பியத் தமனி
gonadial artery இனஉறுப்புத் தமனி
greater palatine artery அண்ணப் பெருந்தமனி
hepatic artery ஈரல் தமனி
hepatic artery ஈரனாடி
hepatic artery கல்லீரல் தமனி
hepatic artery கல்லீரனாடி
hyoidean artery உவையுருநாடி
iiiac artery இடைநாடி
iliac artery இடைநாடி
iliac artery புடைதாங்கி
iliac artery புடைதாங்கிநாடி

ARTERY IN TAMIL -1


temporal artery கன்னநாடி
accessory artery துணைத் தமனி
afferent glomerular artery தமனி வலைப்பின்னல, நுழை தமனி
allantoic artery கருகழிவுறுப்புத்தமனி
anterior mesenteric artery குடல்தாங்கி முன்தமனி
artery தமனி
artery தமணி, நல் இரத்தக் குழாய்
artery தமணித் தந்துகி / தமணி
artery நாடி
artery forceps தமனி இடுக்கி
artery,pulse நாடி
auriculo temporal காது நரம்புகள்
axillary artery அக்குளத் தமனி
axillary artery அக்குள்நாடி
basilar artery தளத்தியத் தமனி
brachial artery கைத்தமனி
brachial artery புயத்தமனி
brachial artery புயநாடி
carotid artery உறக்கநாடி
carotid artery கரோட்டிட் தமனி
carotid artery சிரசு நாடி
carotid artery சிரசுநாடி
carotid artery தலைநாடி
caudal artery வானாடி
cheek bones, temporal bones கண்ணவெலும்புகள்
coeliac artery வயிற்றறுநாடி
coeliac artery வயிற்றுநாடி
common iliac artery பொது இலியகத் தமனி
communicating artery இணைப்புத் தமனி
cornary artery முடியுருநாடி

Monday, September 24, 2012

(TWITTER )ட்விட்டரின் புதிய பயனுள்ள வசதி

தற்பொழுது சமூக தளங்களுக்கு இடையேயான போட்டியில் அந்த தளங்கள் புதிய வசதிகளை வாசகர்களுக்கு வழங்கி வருகின்றன.  அந்த வரிசையில் ட்விட்டர் சமூக இணையதளம் பதிவர்களுக்காக ஒரு புதிய வசதியை அளித்துள்ளது. இந்த புதிய வசதியின் படி இதுவரை நீங்கள் பகரிந்த ட்வீட்களை விட்ஜெட்டாக உங்க பிளாக்கில் வைத்துக்கொள்ளலாம். இதற்கு முன்னர் இந்த வசதியை சில மூன்றாம் தளத்தின் உதவியுடன் பிளாக்கில் இனி  அந்த வசதியை ட்விட்டர் தளமே அறிமுக படுத்தி உள்ளது.
வழிமுறை:
  • முதலில் ட்விட்டர் தளத்திற்கு சென்று உங்கள் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். 
  • மேலே Search bar க்கு அருகில் உள்ள சிறிய அம்புகுறியை அழுத்தி Settings என்பதை கிளிக் செய்யவும். 
    • Settings பகுதி திறந்த உடன் இடது புறத்தில் உள்ள மெனுவில் Widgets - Create New என்பதை தேர்வு செய்யவும்.
    • உங்களுக்கு கீழே  விண்டோ வரும் அதில் விட்ஜெட் அமைக்க தேவையான வசதிகள் இருக்கும் அவைகளை பயன்படுத்து உங்களுக்கு பிடித்தமான மற்றும் உங்கள் பிளாக்கின் டேம்ப்லேட்டிற்கு பொருத்தமாக விட்ஜெட்டை தயார் செய்து கொள்ளவும். 
    • இதில் Domains பகுதியில் விட்ஜெட்டை இணைக்க போகும் தளத்தின் முகவரியை கொடுக்கவும். 
    • பிறகு கீழே உள்ள Create Widgets என்ற பட்டனை அழுத்தினால் ஒரு HTML கோடிங் கிடைக்கும் அதை முழுவதும் காப்பி கொள்ளவும். 
    • பிளாக்கரில் Dashboard - Layout - Add a Gadget - HTML/JavaScript - சென்று பேஸ்ட் செய்து Save பட்டனை அழுத்தி விட்டால் உங்கள் பிளாக்கில் நீங்கள் பகிர்ந்த அனைத்து த்வீட்களையும் காண முடியும்.
    இந்த விட்ஜெட்டில் உள்ள இன்னொரு சிறப்பம்சம் இந்த விட்ஜெட்டோடு follow பட்டனும் சேர்ந்து வருவதால் நாம் தனியே Twitter Follow பட்டன் இணைக்க வேண்டிய அவசியம் இல்லை.

EARN MONEY YOU TOO

http://myinvitepay.com/?ref=176694 copy the above add and past it in your url and you also earn money. go to the above add and get benifit when you register,and also if you spread then get more