animated man walking back and forth Scorching sun animation

Monday, September 24, 2012

(TWITTER )ட்விட்டரின் புதிய பயனுள்ள வசதி

தற்பொழுது சமூக தளங்களுக்கு இடையேயான போட்டியில் அந்த தளங்கள் புதிய வசதிகளை வாசகர்களுக்கு வழங்கி வருகின்றன.  அந்த வரிசையில் ட்விட்டர் சமூக இணையதளம் பதிவர்களுக்காக ஒரு புதிய வசதியை அளித்துள்ளது. இந்த புதிய வசதியின் படி இதுவரை நீங்கள் பகரிந்த ட்வீட்களை விட்ஜெட்டாக உங்க பிளாக்கில் வைத்துக்கொள்ளலாம். இதற்கு முன்னர் இந்த வசதியை சில மூன்றாம் தளத்தின் உதவியுடன் பிளாக்கில் இனி  அந்த வசதியை ட்விட்டர் தளமே அறிமுக படுத்தி உள்ளது.
வழிமுறை:
  • முதலில் ட்விட்டர் தளத்திற்கு சென்று உங்கள் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். 
  • மேலே Search bar க்கு அருகில் உள்ள சிறிய அம்புகுறியை அழுத்தி Settings என்பதை கிளிக் செய்யவும். 
    • Settings பகுதி திறந்த உடன் இடது புறத்தில் உள்ள மெனுவில் Widgets - Create New என்பதை தேர்வு செய்யவும்.
    • உங்களுக்கு கீழே  விண்டோ வரும் அதில் விட்ஜெட் அமைக்க தேவையான வசதிகள் இருக்கும் அவைகளை பயன்படுத்து உங்களுக்கு பிடித்தமான மற்றும் உங்கள் பிளாக்கின் டேம்ப்லேட்டிற்கு பொருத்தமாக விட்ஜெட்டை தயார் செய்து கொள்ளவும். 
    • இதில் Domains பகுதியில் விட்ஜெட்டை இணைக்க போகும் தளத்தின் முகவரியை கொடுக்கவும். 
    • பிறகு கீழே உள்ள Create Widgets என்ற பட்டனை அழுத்தினால் ஒரு HTML கோடிங் கிடைக்கும் அதை முழுவதும் காப்பி கொள்ளவும். 
    • பிளாக்கரில் Dashboard - Layout - Add a Gadget - HTML/JavaScript - சென்று பேஸ்ட் செய்து Save பட்டனை அழுத்தி விட்டால் உங்கள் பிளாக்கில் நீங்கள் பகிர்ந்த அனைத்து த்வீட்களையும் காண முடியும்.
    இந்த விட்ஜெட்டில் உள்ள இன்னொரு சிறப்பம்சம் இந்த விட்ஜெட்டோடு follow பட்டனும் சேர்ந்து வருவதால் நாம் தனியே Twitter Follow பட்டன் இணைக்க வேண்டிய அவசியம் இல்லை.

பைல்கள் -போல்டர்களை பாஸ்வேர்ட்கொடுத்து பாதுகாக்க

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பர்சனல் தகவல்கள் இருக்கும். அதை மற்றவர்கள் பார்பதை விரும்பமாட்டார்கள். நாம் நமது தகவல்களை இவ்வாறு மற்றவர்கள் பார்வையில் இருந்து மறைத்துவைக்கலாம்.3 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இந்த சாப்ட்வேரினை நீங்கள் இன்ஸ்டால் செய்யும் சமயமே உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் நீங்கள கொடுக்கப்போகும் பாஸ்வேர்டினை தட்டச்சு செய்யவும் ( இந்த பாஸ்வேர்ட் தான் உங்கள் அனைத்துப்பைல்களுக்கும் உண்டான பாஸ்வேர்டாகையால் இதனை கவனமாக தட்டச்சு செய்து நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்)

இப்போழுது நீங்கள் இந்த சர்ப்ட்வேரினை ஓப்பன் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
ஓ.கே.கொடுத்து வெளியேறுங்கள். இப்போழுது நீங்கள் உங்கள் சாப்ட்வேரினைன திறக்க உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்கள் சாப்ட்வேரின் பாஸ்வேர்டினை கொடுத்தபின்னர்தான் உங்களுடைய பைல் ஓப்பன் ஆகும்.
இதன் மூலம் மற்றவர்கள் பார்வையிலிருந்து உங்கள் பைல்களை போல்டர்களை மறைக்கலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.

உங்கள் ஜிமெயில் இலவசமாக SMS அனுப்புவது எப்படி:


இணைய பயனர்களில் பெரும்பாலானவர்களால் உபயோகப்படுத்தப்படும் கூகுளின் சிறந்த சேவை ஜிமெயில் எனப்படும் இலவச மெயில் சேவையாகும். நாளுக்கு நாள் பல்வேறு புதிய வசதிகளை ஜிமெயிலில் புகுத்து வாசகர்களை கவர்கிறது கூகுள் நிறுவனம். இப்பொழுது மேலும் ஒரு பயனுள்ள வசதியை வாசகர்களுக்கு வழங்கி உள்ளது. ஜிமெயில் மூலம் SMS அனுப்பும் வசதி. இந்த வசதியை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது கூகுள் நிறுவனம் ஆனால் இந்திய மொபைல்கள் மொபைல் நெட்வொர்க் கம்பெனிகள் சப்போர்ட் செய்யாமல் இருந்தது. இப்பொழுது இந்திய மொபைல்களும் SMS வசதிக்கு சப்போர்ட் செய்கிறது.

இலவசமாக SMS அனுப்புவது எப்படி:
முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து Chat பகுதியில் நீங்கள் SMS அனுப்ப விரும்பும் நண்பரின் பெயரை டைப் செய்யவும். உங்களுக்கு ஒரு சிறிய மெனு வரும் அதில் Send SMS என்ற வசதியை தேர்வு செய்யுங்கள்.

இணைய பயனர்களில் பெரும்பாலானவர்களால் உபயோகப்படுத்தப்படும் கூகுளின் சிறந்த சேவை ஜிமெயில் எனப்படும் இலவச மெயில் சேவையாகும். நாளுக்கு நாள் பல்வேறு புதிய வசதிகளை ஜிமெயிலில் புகுத்து வாசகர்களை கவர்கிறது கூகுள் நிறுவனம். இப்பொழுது மேலும் ஒரு பயனுள்ள வசதியை வாசகர்களுக்கு வழங்கி உள்ளது. ஜிமெயில் மூலம் SMS அனுப்பும் வசதி. இந்த வசதியை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது கூகுள் நிறுவனம் ஆனால் இந்திய மொபைல்கள் மொபைல் நெட்வொர்க் கம்பெனிகள் சப்போர்ட் செய்யாமல் இருந்தது. இப்பொழுது இந்திய மொபைல்களும் SMS வசதிக்கு சப்போர்ட் செய்கிறது.

இலவசமாக SMS அனுப்புவது எப்படி:
முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து Chat பகுதியில் நீங்கள் SMS அனுப்ப விரும்பும் நண்பரின் பெயரை டைப் செய்யவும். உங்களுக்கு ஒரு சிறிய மெனு வரும் அதில் Send SMS என்ற வசதியை தேர்வு செய்யுங்கள்.

உலகில் நீங்கள் எத்தனையாவது நபர் என அறிய வேண்டுமா?



உலக மக்கள் தொகை வெற்றிகரமாக 700 கோடியை எட்டி விட்டது. மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாம். பெருகி வரும் மக்கள் தொகை பெருக்கத்தை தடுக்க  மக்கள் தொகைக் கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஐ.நா.,வின் மக்கள் தொகை நிதியமைப்பு, ஒரு புதிய இணையதளத்தை உருவாக்கியுள்ளது. அந்த இணையதளத்தில் நீங்கள் நுழைந்து, உங்கள் வயது,உங்கள் வயது, பாலினம், பிறந்த தேதி, பிறந்த இடம், தற்போதைய முகவரி போன்ற தகவல்களை கொடுத்தால் அடுத்த வினாடியில் உலகில் நீங்கள் எத்தனைவது நபர் என்ற எண்ணிக்கை கிடைக்கும். ஐ.நா.,வின் மக்கள் தொகை பிரிவு, மக்கள் தொகை நிதியமைப்பு, க்ளோபல் பூட்பிரின்ட் உள்ளிட்ட ஐ,நா.,வின் பிற அமைப்புகள் வழங்கும் தரவுகளின் அடிப்படையில் இந்த நம்பர் உங்களுக்கு வழங்கப்படும்.

முதலில் கீழே உள்ள லிங்கில் கிளிக் செய்து இந்த தளத்திற்கு செல்லுங்கள். உங்களுக்கு அந்த தளம் ஓபன் ஆகும் அதில் தற்போதைய மக்கள் தொகை எண் இருக்கும். (அதை கவனியுங்கள் ஒவ்வொரு நொடிக்கும் 5 முதல் 10 அதிகமாகி கொண்டே இருக்கும். அவ்வளவு வேகத்தில் மக்கள் தொகை அதிகரித்து கொண்டு உள்ளது) அதில் உள்ள Get Started என்ற பட்டனை அழுத்தவும். 







ஜிமெயிலின் Vacation Responder வசதி



கூகுள் வழங்கும் இலவச மெயில் சேவை வசதியான ஜிமெயிலில் ஏராளமான வசதிகள் உள்ளது. அதில் ஒன்று தான் இந்த Vacation Responder வசதி. நாம் எப்பொழுதாவது வெளியூருக்கு சென்று விட்டாலோ அல்லது வேறு ஏதேனும் சூழ்நிலைகள் காரணமாக உங்களின் ஈமெயிலை பார்க்க முடியாமல் போகலாம். அந்த நேரத்தில் உங்களுக்கு அனுப்பப்படும் ஈமேயில்களுக்கு பதில் போட முடியாமல் போய்விடும். உங்களுக்கு மெயில் அனுப்பி விட்டு பதில் வரும் என காத்திருப்பவர்க்கும் ஏமாற்றம் தான் மிஞ்சும். நீங்கள் எப்ப்லோலுது திரும்ப வருகிறீர்களோ அப்பொழுது தான் Reply அனுப்ப முடியும். இதனால் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாவதோடு மட்டுமில்லாமல் ஏதேனும் தொழில் ரீதியான ஈமேயிலாக இருந்தால் உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போகும்.

இந்த பிரச்சினைகளை தீர்ப்பது தான் ஜிமெயிலின் Vacation Responder வசதி. இந்த வசதியின் மூலம் ஒரு குறிப்பிட்ட செய்தியை சேமித்து இந்த வசதியை ஆக்டிவேட் செய்து விட்டால் நீங்கள் இல்லாத சமயத்தில் வரும் அனைத்து ஈமேயில்களுக்கும் Automatic பதில் அனுப்பி விடும். இதனால் ஈமெயில் அனுப்பிவரும் உங்களின் நிலைமையை புரிந்து கொள்வார். பிரச்சினைகள் தவிர்க்கப்படும்.

Vacation Responder வசதியை ஆக்டிவேட் செய்வது எப்படி:
  • முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். 
  • அடுத்து Options ==> Mail Settings பகுதிக்கு செல்லுங்கள். 
  • உங்களுக்கு வரும் விண்டோவில் Vacation Responder என்ற வசதி பகுதிக்கு செல்லவும்.
அடுத்து கீழே படத்தில் உள்ளதை போல Settings மாற்றி கொள்ளுங்கள்.  கொள்ளுங்கள்.


First Day - நீங்கள் ஈமெயில் பார்க்க முடியாமால் போகும் தேதி.
Ends - இந்த வசதியை நிருதப்படவேண்டிய நாள்.

பிறகு அந்த கட்டத்தில் உங்களுக்கு வேண்டியதை டைப் செய்து கொள்ளுங்கள். கீழே உள்ள டிக் மார்க் தேர்வு செய்தால் உங்கள் மெயில் Contact List ல் இருந்து வரும் மெயில்களுக்கு மட்டும் Automatic Reply Email அனுப்பப்படும். வேறு ஈமேயில்கள் வந்தால் Automatic Reply அனுப்பாது.

அனைத்தும் தேர்வு செய்த பின்னர் கீழே உள்ள Save Changes என்ற பட்டனை கிளிக் செய்தால் இந்த வசதி ஆக்டிவேட் ஆகிவிடும். அதற்க்கான அறிவிப்பு உங்கள் ஜிமெயில் முகப்பு பக்கத்தில் இருக்கும்.

திரும்ப வந்து இதில் உள்ள Endnow லிங்கை அழுத்தினால் இந்த வசதி Off ஆகிவிடும்.

20GB அளவுள்ள பெரிய வீடியோ பைல்களை Youtube ல் நேரடியாக அப்லோட் செய்ய



கூகுள் வழங்கு சிறந்த சேவைகளில் ஒன்று யூடியுப் தளம். இணையத்தில் பல ஆயிரக்கணக்கான வீடியோக்களை அனைவரும் பார்த்து ரசிக்க கூடிய தளமாகும். இந்த தளத்தில் நம்முடைய வீடியோக்களையும் அப்லோட் செய்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதி உள்ளது. சாதாரணமாக யூடியுப் தளத்தில் சுமார் 15 நிமிட வீடியோவை தான் அப்லோட் செய்யும் வசதி உள்ளது. இதனால் பெரிய வீடியோ பைல்களை அப்லோட் செய்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. ஆனால் யூடியுப் தளத்தில் 20GB அளவுள்ள 12 மணி நேரம் ஓடக்கூடிய வீடியோ பைல்களையும் அப்லோட் செய்யும் வசதி மறைந்து உள்ளது. அதனை எப்படி ஆக்டிவேட் செய்வது என கீழே பார்ப்போம்.
length video files upload on youtube

கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள் - Free Memory Improve Master

இந்த மென்பொருளை நீங்கள் Install செய்து விட்டால் போதும் உங்கள் கணினியில் நீங்கள் எத்தனை ப்ரோக்ராம் ஒரே நேரத்தில் இயங்கினாலும் அதன் மெமரியை கட்டு படுத்தி உங்கள் கணினியின் வேகத்தை குறையாமல் பார்த்து கொள்ளும். இந்த மென்பொருளை நீங்கள் Download செய்ய உங்கள் கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்.


டவுன் லோட் செய்தவுடன் நமக்கு வந்திருக்கும் free-mim என்ற Setup பைல் வந்திருக்கும். அதை இரண்டு முறை கிளிக் செய்து மென்பொருளை Install செய்து கொள்ளுங்கள். மென்பொருளை Install செய்ததும் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.




 இதில் ஐந்து  வகையான பிரிவுகள்  நமக்கு தெரியும்.
  • Information Overview
  • Memory Optimization
  • System Tuneup
  • Process Management
  • Configuration and Settings - என்ற பிரிவுகள் காணப்படும்.  

Information Overview
 இந்த பட்டனை கிளிக் செய்தவுடன் நமக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும். 





Memory Optimization
இந்த பிரிவில் சென்றால் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். 

  • இந்த விண்டோவில் Fast Free, Deep Compress என்ற இரு வசதிகள் இருக்கும் இவை இரண்டுமே நம் கணினியின் மெமரிய கட்டு படுத்த உதவும் வசதிகளாகும். 
  • இதில் உள்ள Fast Free என்பதை கிளிக் செய்தால் உங்களுக்கு கீழே ஒரு மெசேஜ் விண்டோ வரும். 
  • அதில் உங்களுடைய கணினி இதற்க்கு முன்னர் எவ்வளவு மெமரியை உபயோகித்தது. இப்பொழுது இந்த மென்பொருள் எவ்வளவு மெமரிய கட்டு படுத்தி உள்ளது என்ற விவரம் வரும்.   


  • இதை நீங்கள் ஒவ்வொரு முறையும் செய்ய வேண்டியதில்லை ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் அது தானாகவே இயங்கி நம் கணினியின் மெமரியை கட்டுபடுத்தும். 
  • இடைவெளி நேரத்தை மாற்ற விரும்பினால் அதற்கு கீழே உள்ள Auto Free every என்ற இடத்தில் உங்களுடைய நேரத்தை தேர்வு செய்து Save செய்து விடுங்கள். 
அடுத்து உள்ள மூன்று பிரிவுகளும் மென்பொருளின் அமைப்பை சரிசெய்வதர்க்கும், நம் கணினியில் எந்த பைல்கள் எவ்வளவு மெமரியை உபயோகித்து கொள்கிறது போன்ற தகவல்கள். கண்டிப்பாக உங்கள் கணினி முன்பை விட வேகமாக இயலும்.

உங்கள் கணிணி வேகமாக 1


முதலில் டெஸ்க்டாப்பிலுள்ள ஸ்டார்ட் பட்டனை கிளிக்
செய்து ரன் ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள். அதில் msconfig என
தட்டச்சு செய்து ஓ.கே. கொடுங்கள். விளக்கப்படம் கீழே:-

இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் ஆறாவது காலத்தில் உள்ள Startup கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இப்போது வரும் Startup விண்டோவில் உங்களுக்குஎந்த
மென்பொருள் விண்டோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் லோடு ஆக
வேண்டுமோ அதை மட்டும் வைத்துக்கொண்டு மற்றதை Disenable
செய்து விடுங்கள். Apply செய்து ஓ.கே. கொடுங்கள்.
இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
ரீ -ஸ்டார்ட் கொடுங்கள். இப்போது உங்கள் கணிணி வேகமாக
செயல்படுவதை காண்பீர்கள்..

யு‌எஸ்‌பி பென்ட்ரைவில் விண்டோஸ் 7 ஐ நிறுவுவது எப்படி ?



இவ்வாறு நிறுவுவதற்க்கு 4 ஜி‌பி பென்ட்ரைவ் மற்றும் விண்டோஸ் 7 டி‌வி‌டி தேவை .
முதலில்
1. யு‌எஸ்‌பி போர்ட்டில் யு‌எஸ்‌பி பென்ட்ரைவ் யினை செருகவும்
2. USB Flash Drive யு‌எஸ்‌பி பென்ட்ரைவ் யினை NTFS ஆக Format செய்யவும்
3. Windows7/Vista DVD யினை அதற்குரிய Drive ல் இடவும்
4. பின் dvd Drive மற்றும் பென்ட்ரைவ் களுக்கு கொடுக்கப்பட்டுள்ள எழுத்தை (drive letter) பார்க்கவும். My Computer ல் இதனை காணலாம்
(இங்கு நான் DVD Drive க்கு ‘D’ யும் Flash Drive க்கு ‘H’ எனவும் கொடுத்துள்ளேன்
5.Command Prompt ஐ திறக்கவும்
*Type cmd in Start menu search box and hit Ctrl+ Shift+ Enter.
அல்லது
*Start menu > All programs > Accessories, right click on
Command Prompt and select Run as administrator.
6. Command Prompt ல் பின்வருவதை டைப் செய்து என்டர் தட்டவும்
D: CD BOOT என டைப் செய்து என்டர் தட்டவும்
இங்கு D பதிலாக உங்கள் DVD drive letter யினை தரவும்
அடுத்து CD BOOT என டைப் செய்து என்டர் தட்டவும்
7. BOOTSECT.EXE /NT60 H: என டைப் செய்து என்டர் தட்டவும்.
இங்கு H பதிலாக உங்கள் Pendrive letter யினை தரவும்
8. Windows 7/Vista DVD உள்ள கோப்புகள் அனைத்தையும் USB flash drive க்கு கொப்பி செய்யவும்
9. இனி உங்கள் pendrive ஆனது windows 7 bootable Flash Drive ஆக மாறிவிட்டது..
இனி நீங்கள் எந்தக் கணணிக்கும் உங்கள் windows 7 bootable Flash Driveல் இருந்து Windows 7னை நிறுவிக் கொள்ளலாம்..
Bios ல் boot priority யினை USB from the HDD or CD ROM drive க்கு மாற்றி பின் வழக்கம் போலவே நிறுவிக் கொள்ளலாம்.

Facebook கணக்கை முடக்கிவிட்டால் எப்படி மீட்பது


Facebook தளத்தின் அறிவிப்பின் படி ஒரு நாளைக்கு சராசரியாக 600,000 Hacking முயற்சிகள் நடக்கிறதாம். நீங்கள் எவ்வளவு கடினமான கடவுச்சொல் வைத்திருந்தாலும் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சுலபமாக கடவுச் சொல்லை திருடி கணக்கை முடக்கி விடுகின்றனர். அப்படி Facebook கணக்கை முடக்கிவிட்டால் எப்படி மீட்பது என பார்ப்போம்.
இதற்கு Facebookல் ஒரு வசதி கொடுத்து உள்ளனர். அந்த வசதியின் மூலம் சுலபமாக hack செய்யப்பட கணக்கை திரும்பப் பெறலாம். நீங்கள் Facebookல் இருந்தால் signout கொடுத்து வெளியேறுங்கள். பிறகு இந்த லிங்கில் https://www.facebook.com/hacked செல்லுங்கள். உங்களுக்கு ஒரு window வரும். அந்த windowவில் உள்ள My Account Is Compromised என்ற பட்டனை click செய்யவும். உங்களுக்கு அடுத்த window open ஆகும். அந்த windowவில் உங்கள் கணக்கை திரும்ப பெற பல வசதிகள்(email, mobile number, friends name) இருக்கும். அதில் உங்களுக்கு எந்த வழியில் வேண்டுமோ அந்த வழியை தேர்வு செய்து கொள்ளுங்கள். (இங்கு எப்படி ஈமெயில் மூலம் மீட்பது என பார்ப்போம்).
மின்னஞ்சல் முகவரியை கொடுத்த பின்னர் கீழே உள்ள Search என்ற பட்டனை அழுத்துங்கள்.
அடுத்து உங்களுக்கு இன்னொரு window open ஆகும். நீங்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரியில் உள்ள facebook கணக்கை காட்டும்.உங்கள் கணக்கில் கடைசியாக இருந்த கடவுச் சொல்லை அந்த இடத்தில் கொடுக்கவும். கடவுச் சொல்லை கொடுத்தவுடன் கீழே உள்ள Continue என்ற பட்டனை அழுத்தவும். அடுத்த window open ஆகும். அதில் உள்ள Send Codes and Login to Gmail என்ற பட்டனை அழுத்தவும்.
உங்களுக்கு இன்னொரு Pop-up window open ஆகும். அதில் இந்த ஜிமெயிலின் முகவரி மற்றும் கடவுச் சொல் கேட்கும் அதை சரியாக கொடுத்த பின்னர் ஜிமெயிலின் அனுமதி கேட்கும் அதில் Allow கொடுத்து விட்டால் போதும் உங்களுக்கு ஒரு window வரும். இப்பொழுது புதிய கடவுச் சொல்லை தெரிவு செய்து கொண்டு கீழே உள்ள Change Password என்பதை கொடுத்து விட்டால் போதும் உங்களின் கணக்கு திரும்ப பெறப்படும். இனி நீங்கள் உங்கள் facebook கணக்கை எப்பொழுதும் போல உபயோகிக்கலாம்.

கணினியில் சிக்கிக் கொண்ட CDஐ வெளியே எடுப்பதற்கு


நீங்கள்  CD பயன்படுத்தும்  போது  CD கணினியின் CD driveவில் இருந்து வெளியே வராமல் உங்களை மோசமான நிலையில் சிக்க வைக்கும். எத்தனை முறை CD driveன் eject பட்டனை அழுத்தினாலும் அப்படியே CD drive வெளியே வராமல் இருக்கும். இந்த சூழ்நிலையில் என்ன செய்தால் CD drive திறக்கப்பட்டு CD  வெளியே வரும் என்பதனைப் பார்க்கலாம்.
முதலில் CD drive திறக்கப்பட்டு CD இருக்கும் அந்த plastic tray வெளியே நீண்டு வரவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். இந்தச் சூழ்நிலையை சமாளித்து CDயை கீழ்க்காணும் வழிகளைக் கையாண்டு வெளியே எடுக்கலாம்.
வழி 1:
My computer ஐகானில் click  செய்திடுங்கள். உங்கள் desktopல் இந்த ஐகான் இல்லை என்றால் நிச்சயம் start  மெனுவில் இருக்கும். இதனைத் திறந்தவுடன் உங்கள் கணினியின் driveகள் அனைத்தும் காட்டப்படும்.
இதில் Devices with removable stroage என்ற பிரிவில் CDயின் படத்துடன் ஒரு ஐகான் இருக்கும். அல்லது சிக்கிக் கொண்ட CD ஏதேனும் ஒரு நிறுவனம் தந்துள்ள package என்றால் நிறுவனம் தந்துள்ள ஐகானுடன் அந்த drive காட்டப்படும்.
இதன் மீது right click செய்திடுங்கள். கிடைக்கப் பெரும் மெனுவில் Eject என்ற பிரிவில் click செய்திடுங்கள். உங்கள் CD driveவில் உள்ள eject பட்டன் தேய்ந்து போய் நீங்கள் அழுத்துகையில் அதன் செயல்பாடு மேற்கொள்ளப்படாத சூழ்நிலையில் இந்த வழி செயல்படும். இதற்கும் CD drive திறக்கவில்லை என்றால் அடுத்த வழியைப் பார்க்கலாம்.
வழி 2:
பேப்பர் கிளிப் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். (ஜெம் கிளிப் என்றும் சிலர் இதனை அழைக்கின்றனர்) அதன் ஒரு முனையை பிரித்து நீட்டுங்கள். CD driveவின் eject பட்டன் அருகே சிறிய துளை இருப்பதைக் காணுங்கள். நிச்சயம் இதுவரை நீங்கள் இதனைக் கண்டு கொள்ளாமல் இருந்திருப்பீர்கள். இப்போது நிச்சயம் இதன் உதவி வேண்டியதிருக்கிறது. இந்த துளையில் மெதுவாக பிரித்த பேப்பர் கிளிப்பின் சிறிய கம்பியை உள்ளே செலுத்தவும். சிறிது உள்ளே செலுத்தியவுடன் அது ஒரு இடத்திற்கு மேல் செல்லாது.
இந்த இடத்தில் சிறிய அளவில், மிகச் சிறிய அளவில் அழுத்தம் கொடுக்கவும். Eject  செய்யும் போது இயங்கும் internal lock உள்ள இடத்தில் இந்த அழுத்தம் கிடைப்பதால் driveவின் கதவு திறக்கும்.
உடனே CDயை எடுத்துவிட்டு மீண்டும் driveவின் கதவினை மூடவும். மறக்காமல் பேப்பர் கிளிப் பின்னை எடுத்துவிடவும். ஏனென்றால் பலர் CD வெளியே வந்த சந்தோஷத்தில் பேப்பர் கிளிப்பைச் செருகியபடியே வைத்துவிடுவார்கள்.

Hardware சீரமைக்க


http://www.wieldraaijer.nl/
இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த application open செய்து வேண்டிய drive கோலனை தேர்வு செய்து, Read only button அழுத்தி சோதனை செய்து கொண்டு, error செய்தி இருப்பின் Fix button அழுத்தவும். Error செய்திகளை நீக்கம் செய்ய வேண்டுமெனில் Fix and Recover button அழுத்தி இந்த error செய்திகளை மீட்டுக்கொள்ள முடியும். பின் கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். விண்டோஸ் 7 operating systemக்கு  இந்த மென்பொருள் சிறந்தது ஆகும். Hardware சீரமைக்க இந்த மென்பொருள் சிறந்தது ஆகும்.

Facebookல் Group உருவாக்குவது மிகவும் சுலபமான விஷயம்



         Facebookன் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லக் காரணம் அதில் உள்ள பல வசதிகள் தான். அந்த வரிசையில் Facebookன் Group வசதி மிகவும் பயனுள்ள ஒரு வசதியாகும். நண்பர்களுக்குள் ஒரு குழு உருவாக்கிக் கொண்டு நீங்கள் விருப்பபட்டதை groupல் பகிரலாம்.  எப்படி Facebookல் group உருவாக்குவது என பார்ப்போம்.
Facebookல் Group உருவாக்குவது மிகவும் சுலபமான விஷயம் மொத்தமே 2 நிமிடங்கள் தான் ஆகும்.
  • முதலில் http://www.facebook.com/login.php சென்று  facebook தளத்தை open செய்து கொள்ளுங்கள்.
  • ஒரு window open ஆகும். அதில் உள்ள Create Group என்ற பட்டனை அழுத்துங்கள்.
  • அடுத்து உங்களுக்கு கீழே இருப்பதை போல ஒரு Pop-up window open ஆகும். அதில் நீங்கள் ஆரம்பிக்கும் குழுமத்தின்(Group) விவரங்களை கொடுக்கவும்.
Group Name – குழுமத்தின் பெயர்
Members – இந்த பகுதியில் உங்களின் நண்பர்களை இந்த குழுமத்தில் உறுப்பினர்களாக ஆக்கலாம்.
Privacy
Open - இதை தேர்வு செய்தால் உங்களின் குழுமத்தையும், குழுமத்தில் உள்ள பதிவுகளையும் அனைவரும் பார்க்க முடியும். உறுப்பினர்களாக இல்லை என்றாலும் கூட இவைகளை பார்க்க முடியும்.
Closed - இதை தேர்வு செய்தால் அனைவரும் உங்கள் குழுமம் மற்றும் அதில் உள்ள உறுப்பினர்கள் ஆகியவற்றை பார்க்கலாம். ஆனால் குழுமத்தின் பதிவுகளை பார்க்க முடியாது. உங்கள் குழுமத்தில் உறுப்பினர் ஆனால் மட்டுமே இந்த பதிவுகளை பார்க்க முடியும்.
Secret- உறுப்பினர்கள் மட்டுமே இந்த குழுமத்தையும் குழுமத்தின் பதிவுகளையும் பார்க்க முடியும்.
இவைகளை உங்கள் வசதிக்கு ஏற்ப தேர்வு செய்து கொண்டு கீழே உள்ள Create என்ற பட்டனை அழுத்தினால் உங்கள் குழுமம் தயாராகிவிடும். இனி அந்த குழுமத்தை உபயோகிக்க ஆரம்பியுங்கள்.

Windows 7-ல் Passward மாற்றுவதற்கு


கணினி பயனாளர்கள் அவ்வப்பொழுது சந்திக்கிற ஒரு பிரச்சனை windows இயங்குதளத்தின் Admin கடவுச் சொல்லை மறந்து போவது அல்லது வேறு யாராவது உங்கள் கடவுச் சொல்லை மாற்றிவிடுவது.
இதுபோன்ற சமயங்களில் கணினியில் ஏற்கனவே பதிந்துள்ள மென்பொருட்கள் மற்றும் குறிப்பிட்ட பயனாளர் கணக்கில் சேமித்துள்ள ஆவணங்கள் அனைத்தையும் இழந்து விடுவோம்.
Windows 7 இயங்குதளத்தில் இந்த பிரச்சனையை எளிதாக தீர்க்கலாம். இதனை செயல்படுத்த Windows 7 DVD தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.
Windows 7 Bootable DVD மூலமாக கணினியை தொடங்குங்கள். Install திரையில் Repair your Computer link click செய்யுங்கள்.
அடுத்து வரும் Options திரையில் Command Prompt-ஐ click செய்யுங்கள். இப்பொழுது திறக்கும் Command Prompt திரையில் கீழே உள்ள கட்டளையை கொடுங்கள்.
copy c:windowssystem32sethc.exe c:
இப்பொழுது Sticky Keys கோப்பானது C: -ல் copy செய்யப்படும். அடுத்ததாக cmd.exeகோப்பை Sticky Keys இற்கு பதிலாக Replace செய்திட வேண்டும். அதற்கு கீழே உள்ள கட்டளையை கொடுங்கள்.
copy c:windowssystem32cmd.exe c:windowssystem32sethc.exe

Overwrite
 கேட்கும் பொழுது yes கொடுத்து copy செய்து கொள்ளுங்கள். இனி அடுத்த முறை Sticky keys கோப்பை இயக்கும் பொழுது அதற்கு பதிலாக Command Prompt திறக்கும்.
இப்பொழுது கணினியை restart  செய்து வன்தட்டிலிருந்து [hardware] boot  செய்யுங்கள்.Login திரை தோன்றும் பொழுது Shift Key ஐ 5 முறை தொடர்ந்து அழுத்துங்கள். (இப்படி செய்யும் பொழுது வழக்கம்போல Sticky Keys திறக்காமல் அதற்கு பதிலாக Command prompt திறக்கும்)
Command prompt திரையில் கீழே தரப்பட்டுள்ள கட்டளையை கொடுங்கள். (பயனர்பெயர்(xxx) மற்றும் கடவுச் சொல்லை(new password) உங்கள் தேவைக்கு மாற்றிக் கொள்ளுங்கள்)
net user xxx newpassword
அவ்வளவு தான் கடவுச் சொல் மாற்றப்பட்டது. இனி பழையபடி Sticky Keys கோப்பை restart செய்ய வேண்டும். இதற்கு மறுபடியும் windows 7 DVD யில் boot செய்து Command Prompt சென்று கீழே தரப்பட்டுள்ள கட்டளையை கொடுங்கள்.
c:sethc.exe c:windowssystem32sethc.exe.
Overwrite கேட்கும் பொழுது yes கொடுத்து copy செய்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் உங்களது கடவுச் சொல் மாற்றப்பட்டு விடும்.

தற்போது youtube தளத்தில் முடக்கப்பட்டிருக்கும் வீடியோவினை காண Firefox உலாவியில் ஒரு நீட்சி உள்ளது


  YOUTUBE தளத்தில் நமக்குத் தேவையான எந்த வீடியோவையும் பார்க்க முடியும். தேவையெனில் வேண்டிய வீடியோவினை பதிவேற்றமும்/பதிவிறக்கமும் செய்து கொள்ளவும் முடியும்.
இந்த YOUTUBE தளமானது Google நிறுவனத்துடையது. இந்த YOUTUBE தளத்தில் ஒரு சில வீடியோக்கள் முடக்கப்பட்டிருக்கும். அதுபோன்ற வீடியோக்கள் பெரும்பாலும் பயனர்களைக் கவர்ந்தவையாக இருக்கக்கூடும்.
அந்த நிலையில் அதுபோன்ற குறிப்பிட்ட வீடியோவினைக் காண  ஒரு வழி உள்ளது. ஆனால் தற்போது youtube தளத்தில் முடக்கப்பட்டிருக்கும் வீடியோவினை காண Firefox உலாவியில் ஒரு நீட்சி உள்ளது. அதன் மூலம் முடக்கப்பட்ட வீடியோக்களை காண முடியும்.
சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று நீட்சியினை Firefox உலாவியில் நிறுவிக் கொள்ளவும். பின் ஒரு முறை Firefox உலாவியினை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் அந்த குறிப்பிட்ட Youtube வீடியோவினை காணும் போது “ProxTube is unblocking this video” என்ற எச்சரிக்கை செய்தி தோன்றும்.
Youtube தளத்தில் முடக்கப்பட்ட வீடியோக்களை காண இந்த Proxtube நீட்சி உதவுகிறது. பல்வேறு நாடுகளில் முடக்கப்பட்டிருக்கும் வீடியோவினைக் காண இந்த நீட்சி உதவி புரிகிறது. இணையதள முகவரி http://www.proxtube.com/

மறந்த Wi-Fi Network இன் கடவுச் சொல்லை மீட்பதற்கு!

http://download.cnet.com/WirelessKeyView/3000-2092_4-10614187.html

முதலில் Wireless Key View என்ற இந்த  மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள். முக்கியமாக நீங்கள் எந்த இணைப்பிற்காக கடவுச்சொல்லை தேடுகிறீர்களோ அந்த இணைப்பில் இருக்க வேண்டும்.(Wi-Fi Area உள்ளே இருக்க வேண்டும்).
அடுத்து உங்கள் மடிக்கணினியில் Wifi ON செய்யப்பட்டு இருக்க வேண்டும். இப்போது மென்பொருளை நிறுவிக் கொள்ளுங்கள். இதனை ஓபன் செய்ததும் நீங்கள் இருக்கும் இடத்தில் கிடைக்கக் கூடிய Wi-Fi இணைப்பு பற்றிய தகவல்களை இந்த மென்பொருள் தரும்.
முதலில் Network பெயர், அடுத்து அதன் Key Type, பின்னர் கடவுச்சொல்(Key, ASCII ) போன்றவை கிடைக்கும். இதன் முன்னரே நீங்கள் அந்த இணைப்பை பயன்படுத்தி இருந்திருக்க வேண்டும். மறந்து போன கடவுச் சொல்லை உங்கள் கணணியில் இருந்து இது மீட்டு தரும்.
இது நீங்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் அல்லது பள்ளியில் அல்லது கல்லூரியில் Adminவரவில்லை என்றாலோ, புதிதாக ஏதாவது இணைப்பு கொடுக்கும் பொழுதோ இந்த மென்பொருள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் அல்லவா, எனவே மறவாமல் இப்போதே தரவிறக்கி கொள்ளுங்கள்.

Facebook கணக்கு Deactivate


இணையத்தில் அனைவருக்கும் குறிப்பாக இளைஞர்களுக்கு பிடித்த சமூக இணையதளம் என்றால் அது Facebookகாகத் தான் இருக்கும். ஒரு சில நேரத்தில் உங்களுடைய Facebook கணக்கை செயலிழக்கச்
செய்ய நீங்கள் நினைக்கலாம். இதற்குப் பல்வேறு காரணங்கள் கூறலாம். உங்கள் கணக்கை யாராவது hack செய்தாலோ, தளதினால் நேரம் வீணாகச் செலவாகிறது என நினைக்கலாம், ஒன்றுக்கும் மேற்ப்பட்ட account வைத்திருப்பதால் ஒன்றைச் செயலிழக்க வைக்க நினைக்கலாம். இப்படிப் பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். Facebook கணக்கை எப்படிச் செயலிழக்க வைப்பது எனப் பார்ப்போம்.
  • முதலில் Facebook தளத்திற்குச் சென்று நீங்கள் செயலிழக்க வைக்க வேண்டிய கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
  • பிறகு Account Settings பகுதிக்குச் செல்லுங்கள்.
  • Account Settings கொடுத்தவுடன் உங்களுக்கு இன்னொரு window open ஆகும் அதில் Securityஐ  click செய்யவும்.
  • Security click செய்தவுடன் வரும் windowவில் கீழே இருக்கும் Deactivate your accountஐ click செய்யவும்.
  • அடுத்து இன்னொரு window வரும். அதில் நீங்கள் இந்த கணக்கை Deactivate செய்கிறீர்கள் என்ற சில optionகள் காட்டும். அதில் உங்களுக்கானத்தை தேர்வு செய்யவும்.
  • Email opt out என்ற இடத்தில் Tick mark கொடுக்கவும் (டிக் பண்ணாமல் விட்டால் Facebookல் இருந்து Invitations, Notifications, Email வந்து கொண்டே இருக்கும்)
  • அடுத்து  Confirm buttonஐ  அழுத்தவும். அடுத்து இந்தக் கணக்கின் password கேட்கும். அதை கொடுத்த பின்னர் இன்னொரு Popup window வந்து Verfication Code அதையும் சரியாக கொடுத்து Submit buttonஐ அழுத்தினால் உங்களுக்கு கீழே இருப்பதைப்  போல window வரும்.

உங்களின் கணக்கு Deactivate செய்யப்படும். உங்கள் Profile யாராவது open செய்தால் கீழே கண்ட செய்தி தான் வரும்.  

பூட்டாகாத கணினியை யுஎஸ்பி வாயிலாக திறப்பது எப்படி?

http://www.4shared.com/file/63478381/f7e02341/PortableWinXPUSB.html

இந்த இயங்குதளத்தை உங்கள் USB நினைவகத்தில் ஏற்றிவிட்டு,அதன்மூலமே கணினியை Boot செய்வது மட்டுமின்றிகணினியையேஇயக்கலாம்.செயலிழந்து கிடந்த கணினியை இந்த USB யில் இருந்தபடிboot செய்து இயக்கி உங்களது பழைய தகவல்களை மீட்டெடுக்கலாம்.

EARN MONEY YOU TOO

http://myinvitepay.com/?ref=176694 copy the above add and past it in your url and you also earn money. go to the above add and get benifit when you register,and also if you spread then get more