கூகுள் வழங்கு சிறந்த சேவைகளில் ஒன்று யூடியுப் தளம். இணையத்தில் பல ஆயிரக்கணக்கான வீடியோக்களை அனைவரும் பார்த்து ரசிக்க கூடிய தளமாகும். இந்த தளத்தில் நம்முடைய வீடியோக்களையும் அப்லோட் செய்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதி உள்ளது. சாதாரணமாக யூடியுப் தளத்தில் சுமார் 15 நிமிட வீடியோவை தான் அப்லோட் செய்யும் வசதி உள்ளது. இதனால் பெரிய வீடியோ பைல்களை அப்லோட் செய்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. ஆனால் யூடியுப் தளத்தில் 20GB அளவுள்ள 12 மணி நேரம் ஓடக்கூடிய வீடியோ பைல்களையும் அப்லோட் செய்யும் வசதி மறைந்து உள்ளது. அதனை எப்படி ஆக்டிவேட் செய்வது என கீழே பார்ப்போம்.
- முதலில் யூடியுப் தளத்திற்கு செல்லுங்கள்.
- யூடியுப் தளத்தில் மேல் பகுதியில் Browse, Movies, Upload என்ற மூன்று லிங்க் இருக்கும். அதில்Upload என்பதை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
- இதில் கீழ் பகுதியில் Upload HD videos in various formats in 15 minutes என்ற செய்தி இருக்கும். அதற்க்கு அருகில் Increase your limit என்ற ஒரு லிங்க் இருக்கும். அதில் கிளிக் செய்யவும்.
length video files upload on youtube |
No comments:
Post a Comment