animated man walking back and forth Scorching sun animation

Monday, September 24, 2012

Windows 7-ல் Passward மாற்றுவதற்கு


கணினி பயனாளர்கள் அவ்வப்பொழுது சந்திக்கிற ஒரு பிரச்சனை windows இயங்குதளத்தின் Admin கடவுச் சொல்லை மறந்து போவது அல்லது வேறு யாராவது உங்கள் கடவுச் சொல்லை மாற்றிவிடுவது.
இதுபோன்ற சமயங்களில் கணினியில் ஏற்கனவே பதிந்துள்ள மென்பொருட்கள் மற்றும் குறிப்பிட்ட பயனாளர் கணக்கில் சேமித்துள்ள ஆவணங்கள் அனைத்தையும் இழந்து விடுவோம்.
Windows 7 இயங்குதளத்தில் இந்த பிரச்சனையை எளிதாக தீர்க்கலாம். இதனை செயல்படுத்த Windows 7 DVD தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.
Windows 7 Bootable DVD மூலமாக கணினியை தொடங்குங்கள். Install திரையில் Repair your Computer link click செய்யுங்கள்.
அடுத்து வரும் Options திரையில் Command Prompt-ஐ click செய்யுங்கள். இப்பொழுது திறக்கும் Command Prompt திரையில் கீழே உள்ள கட்டளையை கொடுங்கள்.
copy c:windowssystem32sethc.exe c:
இப்பொழுது Sticky Keys கோப்பானது C: -ல் copy செய்யப்படும். அடுத்ததாக cmd.exeகோப்பை Sticky Keys இற்கு பதிலாக Replace செய்திட வேண்டும். அதற்கு கீழே உள்ள கட்டளையை கொடுங்கள்.
copy c:windowssystem32cmd.exe c:windowssystem32sethc.exe

Overwrite
 கேட்கும் பொழுது yes கொடுத்து copy செய்து கொள்ளுங்கள். இனி அடுத்த முறை Sticky keys கோப்பை இயக்கும் பொழுது அதற்கு பதிலாக Command Prompt திறக்கும்.
இப்பொழுது கணினியை restart  செய்து வன்தட்டிலிருந்து [hardware] boot  செய்யுங்கள்.Login திரை தோன்றும் பொழுது Shift Key ஐ 5 முறை தொடர்ந்து அழுத்துங்கள். (இப்படி செய்யும் பொழுது வழக்கம்போல Sticky Keys திறக்காமல் அதற்கு பதிலாக Command prompt திறக்கும்)
Command prompt திரையில் கீழே தரப்பட்டுள்ள கட்டளையை கொடுங்கள். (பயனர்பெயர்(xxx) மற்றும் கடவுச் சொல்லை(new password) உங்கள் தேவைக்கு மாற்றிக் கொள்ளுங்கள்)
net user xxx newpassword
அவ்வளவு தான் கடவுச் சொல் மாற்றப்பட்டது. இனி பழையபடி Sticky Keys கோப்பை restart செய்ய வேண்டும். இதற்கு மறுபடியும் windows 7 DVD யில் boot செய்து Command Prompt சென்று கீழே தரப்பட்டுள்ள கட்டளையை கொடுங்கள்.
c:sethc.exe c:windowssystem32sethc.exe.
Overwrite கேட்கும் பொழுது yes கொடுத்து copy செய்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் உங்களது கடவுச் சொல் மாற்றப்பட்டு விடும்.

No comments:

Post a Comment

EARN MONEY YOU TOO

http://myinvitepay.com/?ref=176694 copy the above add and past it in your url and you also earn money. go to the above add and get benifit when you register,and also if you spread then get more