animated man walking back and forth Scorching sun animation

Friday, September 21, 2012

டிவிட்டர் என்றால் என்ன?


டிவிட்டர் என்பது அடிப்படையில் ஒரு குறும் வலைப்பதிவு சேவை.அதாவது எஸ் எம் எஸ் வடிவிலான வலைப்பதிவு என வைத்துக்கொள்ளலாம்.

140 எழுத்துக்கள் என்னும் கட்டுப்பாடும், ‘இப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?’ என்னும் கேள்விக்கான பதிலுமே டிவிட்டரின் பிரதான அம்சங்கள்.

டிவிட்டரை பயன்படுத்துவது மிகவும் எளிதானது.இமெயில் கணக்கு துவக்குவது போல டிவிட்டர் இணையதளத்திற்கு http://twitter.com/ சென்று உங்கள் பெயரில் ஒரு டிவிட்டர் பக்கத்தை அமைத்துக்கொள்ளலாம். அதன் பிறகு டிவிட்டர் செய்ய துவங்க வேண்டியது தான்.

அதிகபட்சம் 140 எழுத்துக்கள் மட்டுமே பயன்படுத்தலாம் என்பது தவிர டிவிட்டரில் வேறு எந்த கட்டுப்பாடும் கிடையாது.நீங்கள் நினைக்கும் எதனையும் டிவிட்டரில் பகிர்ந்துக்கொள்ளலாம்.டிவிட்டர் இலக்கணப்படி இவை நீங்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீகள் என்னும் கேள்விக்கு பதிலளிக்க கூடியதாக இருக்க வேண்டும்.

இதற்கு காரணம் இந்த சேவை துவங்கப்பட்டதன் நோக்கமே நீங்கள் இப்போது என்ன என்ன செய்து கொண்டிருக்கிறீகள் என்பதை உங்கள் நட்பு வட்டாரத்தில் பகிர்ந்து கொள்ள வழி செய்வதற்காகதான்.

டிவிட்டர் முகப்பு பக்கத்தில் உள்ள கட்டத்தில் இதற்கான பதிலை டைப் செய்தீர்கள் எனறால் இந்த தகவலை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.உங்கள் விருப்பத்திற்கேற்ப இவற்றை உங்கள் நண்பர்களோடு மட்டும் பகிர்ந்து கொள்ளலாம்.இல்லை உலகம் முழுவதோடும் பகிர்ந்து கொள்ளலாம்.

நான் டீ சாப்பிட போகிறேன் , சினிமாவுக்கு போகிறேன் , என எந்த வகையான தகவல்களையும் டிவிட்டரில் வெளியிடலாம்.அவை முக்கியமனதாக இருக்க வேண்டும் எனறோ பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றோ கட்டாயமில்லை.

இதனால் யாருக்கு என்ன பயன் என்னும் கேள்வி ஆரம்பத்தில் பலமுறை கேட்கப்பட்டு அலுத்துப்போகும் அளவுக்கு பதிலளிக்கப்பட்டு விட்டது.இப்போது டிவிட்டரால் என்ன பயன் என்று யாரும் கேட்பதில்லை.

இருப்பினும் டிவிட்டரின் உண்மையான பயனை புரிந்துகொள்ள இந்த கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

இருப்பினும் டிவிட்டரின் உண்மையான பயனை புரிந்துகொள்ள இந்த கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளப்படும் அந்தரங்கமான , அலப விவரங்களால் யாருக்கு என்ன பயன்? எனபது டிவிட்டரை அறிமுகம் செய்து கொள்ளும் எவருக்கும் எழக்கூடிய முதல் கேள்வி.

டிவிட்டர் அடிப்படையில் ஒரு சமுக வலைப்பின்னல் சேவை என்பதை கருத்தில் கொண்டு பார்த்தால் இதற்கான அவசியம் புரியும். நட்பு வட்டாரத்தோடு தொடர்பு கொள்ளவும் தங்களுக்குள் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளாவும் டிவிட்டர் துவங்கப்பட்டது.கருத்துக்களை எப்படி வேன்டுமானலும் பகிர்ந்துக்கொள்ளலாம்.டிவிட்டர் நிறுவனர்கள் தேர்வு செய்த வழி நீங்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்னும் கேள்வியாகும்.

இந்த கேள்விக்கான பதிலின் மூலம் ஒருவர் நணபர்களுக்கு தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை சுலபமாக தெரிவிக்க முடியும்.உதாரணத்திற்கு ஒரு கல்லூரி மாணவர் , தான் உடற்பயிற்ச்சி கூடத்திற்கு செல்வதாக கூறலாம்.இல்லை காதலியை பார்க்க செல்வதாக தெரிவிக்கலாம்.அவருடைய நண்பர்களுக்கு இது பயனுள்ளதாக அமையலாம்.

நண்பன் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதை தெரிந்து கொள்ள முடிவதோடு அதற்கேற்ப திட்டங்களையும் வகுத்துக்கொள்ளலாம்.உதாரணத்திற்கு நணபன் சினமாவுக்கு செல்வதாக வைத்துக்கொள்வோம் உடனே மற்ற் நண்பர்கள் தாங்களும் வரத்தாயார் என தெரிவித்து சேர்ந்துக்கொள்ளலாம்.

இல்லை நண்பனை பாரக்கச்செல்லாலாம் என நினைத்துக்கொண்டிருப்பவர் அவர் வேறு வேலையாக இருப்பதைதெரிந்துக்கொண்டு அதற்கேற்ப செயல்படலாம்.


இதை போனில் கூட தான் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.ஆனால் டிவிட்டரில் எந்த முயற்சியும் இல்லாமலேயே நண்பர்களை பின்தொடர முடியும் என்பதே விஷயம்.

போனில் சொல்லும் போது சிலரிடம் மட்டுமே தெரிவிக்க முடியும். சிலரை மறந்துவிடலாம்.என்னிடம் ஏன் சொல்லவில்லை என்று யாராவது கேட்கலாம்.மன்னிக்கவும் மரந்துவிட்டேன் என்று சமாளிக்க வேண்டும்.டிவிட்டரில் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் போது அந்த கவலையே வேண்டாம். 

டிவிட்டர் பக்கத்தில் தகவலை பகிர்ந்து கொன்டால் போதும் மற்றவர்கள் அதை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

மேலும் ஒருவர் டிவிட்டரில் தெரிவிக்கும் தகவல்கள் மூலம் அவரின் அப்போதைய மன நிலையை தெரிந்துகொள்ளலாம். நிச்சயம் நண்பர்களுக்கு இது தேவையானது.டிவிட்டர் இதை தான் செய்ய முறபட்டது.

மேலும் டிவிட்டரை பயன்படுத்துவர் பிரபலம் என்னும் போது அவரது ஒவ்வொரு செயலும் ரசிகர்களுக்கு பயன் மிக்கதாக இருக்கும் அல்லவா?

இப்படிதான் டிவிட்டர் துவங்கியது

No comments:

Post a Comment

EARN MONEY YOU TOO

http://myinvitepay.com/?ref=176694 copy the above add and past it in your url and you also earn money. go to the above add and get benifit when you register,and also if you spread then get more