animated man walking back and forth Scorching sun animation

Monday, September 24, 2012

Facebook கணக்கை முடக்கிவிட்டால் எப்படி மீட்பது


Facebook தளத்தின் அறிவிப்பின் படி ஒரு நாளைக்கு சராசரியாக 600,000 Hacking முயற்சிகள் நடக்கிறதாம். நீங்கள் எவ்வளவு கடினமான கடவுச்சொல் வைத்திருந்தாலும் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சுலபமாக கடவுச் சொல்லை திருடி கணக்கை முடக்கி விடுகின்றனர். அப்படி Facebook கணக்கை முடக்கிவிட்டால் எப்படி மீட்பது என பார்ப்போம்.
இதற்கு Facebookல் ஒரு வசதி கொடுத்து உள்ளனர். அந்த வசதியின் மூலம் சுலபமாக hack செய்யப்பட கணக்கை திரும்பப் பெறலாம். நீங்கள் Facebookல் இருந்தால் signout கொடுத்து வெளியேறுங்கள். பிறகு இந்த லிங்கில் https://www.facebook.com/hacked செல்லுங்கள். உங்களுக்கு ஒரு window வரும். அந்த windowவில் உள்ள My Account Is Compromised என்ற பட்டனை click செய்யவும். உங்களுக்கு அடுத்த window open ஆகும். அந்த windowவில் உங்கள் கணக்கை திரும்ப பெற பல வசதிகள்(email, mobile number, friends name) இருக்கும். அதில் உங்களுக்கு எந்த வழியில் வேண்டுமோ அந்த வழியை தேர்வு செய்து கொள்ளுங்கள். (இங்கு எப்படி ஈமெயில் மூலம் மீட்பது என பார்ப்போம்).
மின்னஞ்சல் முகவரியை கொடுத்த பின்னர் கீழே உள்ள Search என்ற பட்டனை அழுத்துங்கள்.
அடுத்து உங்களுக்கு இன்னொரு window open ஆகும். நீங்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரியில் உள்ள facebook கணக்கை காட்டும்.உங்கள் கணக்கில் கடைசியாக இருந்த கடவுச் சொல்லை அந்த இடத்தில் கொடுக்கவும். கடவுச் சொல்லை கொடுத்தவுடன் கீழே உள்ள Continue என்ற பட்டனை அழுத்தவும். அடுத்த window open ஆகும். அதில் உள்ள Send Codes and Login to Gmail என்ற பட்டனை அழுத்தவும்.
உங்களுக்கு இன்னொரு Pop-up window open ஆகும். அதில் இந்த ஜிமெயிலின் முகவரி மற்றும் கடவுச் சொல் கேட்கும் அதை சரியாக கொடுத்த பின்னர் ஜிமெயிலின் அனுமதி கேட்கும் அதில் Allow கொடுத்து விட்டால் போதும் உங்களுக்கு ஒரு window வரும். இப்பொழுது புதிய கடவுச் சொல்லை தெரிவு செய்து கொண்டு கீழே உள்ள Change Password என்பதை கொடுத்து விட்டால் போதும் உங்களின் கணக்கு திரும்ப பெறப்படும். இனி நீங்கள் உங்கள் facebook கணக்கை எப்பொழுதும் போல உபயோகிக்கலாம்.

No comments:

Post a Comment

EARN MONEY YOU TOO

http://myinvitepay.com/?ref=176694 copy the above add and past it in your url and you also earn money. go to the above add and get benifit when you register,and also if you spread then get more