உலகில் நீங்கள் எத்தனையாவது நபர் என அறிய வேண்டுமா?
உலக மக்கள் தொகை வெற்றிகரமாக 700 கோடியை எட்டி விட்டது. மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாம். பெருகி வரும் மக்கள் தொகை பெருக்கத்தை தடுக்க மக்கள் தொகைக் கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஐ.நா.,வின் மக்கள் தொகை நிதியமைப்பு, ஒரு புதிய இணையதளத்தை உருவாக்கியுள்ளது. அந்த இணையதளத்தில் நீங்கள் நுழைந்து, உங்கள் வயது,உங்கள் வயது, பாலினம், பிறந்த தேதி, பிறந்த இடம், தற்போதைய முகவரி போன்ற தகவல்களை கொடுத்தால் அடுத்த வினாடியில் உலகில் நீங்கள் எத்தனைவது நபர் என்ற எண்ணிக்கை கிடைக்கும். ஐ.நா.,வின் மக்கள் தொகை பிரிவு, மக்கள் தொகை நிதியமைப்பு, க்ளோபல் பூட்பிரின்ட் உள்ளிட்ட ஐ,நா.,வின் பிற அமைப்புகள் வழங்கும் தரவுகளின் அடிப்படையில் இந்த நம்பர் உங்களுக்கு வழங்கப்படும்.
No comments:
Post a Comment