கணினி வாங்கி 1 ஆண்டு ஆகிவிட்டதும், கணினி வாங்கும் போது உடன் கொடுத்த Motherborad CD எங்கிருக்கிறது என்றே தெரியவில்லை என்று சொல்லும் அனைவருக்கும் Driver மென்பொருளை பேக்கப் செய்து வைப்பதற்கு உதவுவதற்காக ஒரு இலவச மென்பொருள் இருக்கிறது.
தறவிரக்க முகவரி :
http://www.softpedia.com/get/System/Back-Up-and-Recovery/Semper-Driver-Backup.shtml
இத்தளத்திற்கு சென்று மென்பொருளை இலவசமாக தறவிரக்கிக்கொண்டு நம் கணினியில் எளிதாக நிறுவலாம். இந்த மென்பொருளை இயக்கி வரும் வகைகளில் நமக்கு எந்த வகையான டிரைவர்
( Audio, video,Lan, Modem) பேக்கப் செய்ய வேண்டுமோ அதை சொடுக்கி Backup Drivers என்ற பொத்தானை சொடுக்கி எளிதாக தறவிரக்கலாம்.
எல்லா வகையான டிரைவர் மென்பொருளும் இணையத்தில் இலவசமாக கிடைத்தாலும் பல நேரங்களில் அதை தேடி எடுப்பது சிரமமான வேலை தான் இதற்காக தான் இந்த
மென்பொருள். உங்கள் கணினியுடன் வரும் Motherboard CD இல்லையென்றால் இனி இந்த இலவச மென்பொருளை தறவிரக்கி டிரைவர் பேக்கப் செய்து வைத்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment